Khushbu: சுந்தர் சி வீட்டில் சமரசம்? செல்போன் சுவிட்ச் ஆஃப்! குஷ்பூவை சந்தித்த நடிகைகள், அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்திலிருந்து இயக்குநர் சுந்தர். சி விலகிய விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவில் அனல் பறக்கப் பேசப்பட்டு வருகிறது. சுந்தர். சி விலகியதால் கிளம்பியக் கேவலமான கமெண்டுகளுக்கு நடிகை குஷ்பு கொடுத்த பதிலடி தான் இன்னமும் HIT அடித்து வருகிறது. இந்தச் சர்ச்சை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, நடிகை குஷ்பு வீட்டில் நடந்த நட்புச் சந்திப்புதான் இப்போதுப் பெரிய செய்தியாகி இருக்கிறது!

குஷ்பு சமாதானம்
தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர். சி விலகியதற்கு பிறகு, ரஜினி படத்துக்காகச் சுந்தர். சியிடம் அவருடைய மனைவியான குஷ்பு சமரசம் பேச முயன்றதாகவும், அதற்குச் சுந்தர். சி கோபப்பட்டுக்கொண்டு போனை OFF செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டார் என்றும் சில செய்திகள் பரவின.
குஷ்புவின் போஸ்ட்
இந்த வதந்திகள் ஒருபுறம் பரவ, குஷ்பு தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தவர்கள் யார் என்று அறிவித்துள்ளார். குஷ்புவின் வீட்டிற்கு நடிகை திரிஷா, ஜெயம் ரவியின் முன்னாள் மனைவியான ஆர்த்தி ரவி, சுந்தர். சியின் சகோதரியான அனி சுந்தர் மற்றும் சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

குதூகலமான பதிவு
அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகை பிருந்தா கோபால் தனதுப் பக்கத்தில் பகிர்ந்து, "வந்ததற்கு நன்றி ஸ்வீட்ஹார்ட்ஸ் என்று பதிவிட்டுள்ளார். அதைக் குஷ்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீஷேர் செய்து, இந்தப் பரபரப்பானச் சூழலிலும் தான் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் இவர்கள்தான் என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.
குஷ்புவின் பதிலடி
சுந்தர். சி விலகியதை அடுத்து, ரஜினிகாந்தைப் பற்றி ஒரு இணையவாசி மிகவும் மோசமான கமெண்ட் ஒன்றை இட்டிருந்தான். "ஐட்டம் பாடலுக்குக் குஷ்புவை ஆடச் சொல்லியிருப்பானோ, அதனால் தான் சுந்தர். சி படத்திலிருந்து விலகிவிட்டார்" என்று அந்த இணையவாசி அருவருக்கத்தக்க விதத்தில் கருத்தைப் பதிவிட்டிருந்தான். இதற்குப் பதிலடி கொடுத்த குஷ்பு, "இல்லை.. உங்க வீட்ல இருந்து யாராவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்" எனப் பதிவிட்டு, தன் கணவருக்கோ, ரஜினி சாருக்கோ எதிராகப் பேசியவனுக்குத் தரமானப் பதிலடி கொடுத்திருந்தார்.
தலைவர் 173 பற்றிய தகவல்
நடிகர் ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சுந்தர். சி விலகிய நிலையில், இந்தப் படம் கைவிடப்படாமல், விரைவில் வேறொரு இயக்குநருடன் தொடரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுந்தர். சி விலகியதற்குக் காரணம் என்ன என்பது மர்மமாக இருந்தாலும், தனது FUN GANG சகிதமாகக் குஷ்பு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த இந்தச் சந்திப்பு, சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓர் ஆறுதலாக அமைந்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications