Jana nayagan: லீக் ஆன ஜனநாயகன் படம்.. இயக்குநர் ஹெச் வினோத்தின் உருக்கமான பதிவு! வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: விஜய் நடித்த 'ஜனநாயகன்' (Jana nayagan) படத்தை சுற்றி வந்துகொண்டிருக்கும் லீக் சர்ச்சை இப்போ ஒரு புதிய திருப்பத்தை எடுத்திருக்கிறது. ஏற்கனவே படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், தற்போது முழு 3 மணி நேர படமே லீக் ஆகி இருக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்த சூழலில், இப்படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தான் இப்போது இந்த விவகாரத்தின் மையமாக மாறியுள்ளது.

இயக்குனர் ஹெச் வினோத் பதிவு
அவர் பதிவில், "ஒவ்வொரு காட்சியும் யாரோ ஒருவரின் கனவு. படம் வெளியாவதற்கு முன்பே அது லீக் ஆகுவது மிகவும் வேதனையானது. தயவு செய்து அதை பகிர வேண்டாம்" என்று மிக எளிமையானாலும், மனதை உருக்கும் வார்த்தைகளில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஒரு பதிவு தான் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. காரணம், ஒரு பெரிய படத்தின் பின்னால இருக்கும் உழைப்பு, கனவு, பலரின் வாழ்க்கை என எல்லாம் ஒரு லீக்கால் பாதிக்கப்படுது என்பதை நினைவூட்டுகிறது.
ஜனநாயகன் பட பிரச்சனை
'ஜனநாயகன்' படம் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனைகளை சந்தித்து வந்தது. சென்சார் தாமதம், ரிலீஸ் தேதி மாற்றம், அரசியல் சர்ச்சை இப்படி தொடர்ந்து சிக்கல்கள் வந்துகொண்டே இருந்த நிலையில், இப்போது இந்த லீக் பிரச்சனை கூட சேர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் பட லீக் காட்சி
முதலில் அறிமுக காட்சி, கிளைமாக்ஸ், பாடல் காட்சிகள் வெளியானது. அதற்குள் முழு படம் லீக் ஆனதாக தகவல்கள் வந்தது. இதனால் படக்குழுவே அதிர்ச்சியில் உள்ளனர். தயாரிப்பாளர் தரப்பும் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறது. ஆனா இந்த எல்லா பரபரப்பையும் விட, இப்போ அதிகம் பேசப்படுவது வினோத்தின் அந்த ஒரு வரி தான் "Every scene carries someone's dream..."
ஜனநாயகன் படம் வீடியோ
இந்த லீக் எப்படி நடந்தது என்ற கேள்வி எல்லாரிடமும் எழுந்திருக்கு. இதைப்பற்றிப் பேசிய இயக்குநர் மைக்கேல் அருண், இது சாதாரண காப்பி இல்ல, 'Edit Reference'ன்னு சொல்லப்படும் பிரதி தான் இருக்கணும் என்கிறார். அந்த மாதிரி காப்பி படக்குழுவில் இருக்கும் மிக சில முக்கியமானவர்களுக்குத்தான் கிடைக்கும்.
ஜனநாயகன் படத்தை லீக் செய்தது யார்
அதாவது வெளியில் இருந்து இல்ல... உள்ளிருந்தே யாரோ லீக் பண்ணிருக்க வாய்ப்பு இருக்குன்னு அவர் மறைமுகமா சொல்றாரு. இதற்கிடையில் தயாரிப்பாளர் தனஞ்செயனும் கடுமையாக ரியாக்ட் பண்ணியிருக்கார். முக்கிய காட்சிகள் மட்டும் இல்லாமல் முழு படமே லீக் ஆகி இருக்கலாம், இது மிகப் பெரிய அநியாயம், உடனடியாக நடவடிக்கை எடுக்கணும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கார்.
விஜய் ஒன்னும் சும்மா சினிமாவை விட்டு வரல.. 20,000 கோடிக்கு ஆசைப்படுகிறார்! ஏமாற்றுக்காரர்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
இப்போ சினிமா வட்டாரத்துல பேசப்படுற பெரிய கேள்வி என்னனா... ஜனநாயகன் படத்தை குறிவைத்து யாராவது திட்டமிட்டு இந்த லீக் பண்ணுறாங்களா? இல்ல உள்ளேயே நடந்த விஷயமா? ரிலீஸ் ஆகாத படமே இவ்வளவு சர்ச்சை கிளப்புற நிலையில், படம் வெளியே வந்தா என்ன ஆகும் என்பதுதான் எல்லாரும் காத்திருக்கிற விஷயம்.
-
"விஜய் மன்னிப்பு கேட்டே ஆகணும்".. ஒரு வார்த்தையால் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. என்ன மேட்டர்? -
ஜனநாயகன் பற்றிய கேள்வி, ரஜினி கொடுத்த ரியாக்சன்! கடைசியில் சொன்ன தத்துவம் தான் ஹைலைட் -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்! -
நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா? -
மீண்டும் மீண்டுமா? விஜய் பரப்புரையில் தொடரும் விதிமீறல்கள்.. நெல்லையில் மட்டும் 5 விபத்துகள் -
திருச்சி கிழக்கு தொகுதியில் ‘டபுள்’ விஜய்.. மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டி! முழு லிஸ்ட் இதோ! -
காரைக்குடியில் விஜய் பரப்புரை செய்ய.. 37 நிபந்தனைகள்! லிஸ்ட் போட்ட தேர்தல் ஆணையம்! -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருங்க.." புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்! -
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications