விஜய் ஒன்னும் சும்மா சினிமாவை விட்டு வரல.. 20,000 கோடிக்கு ஆசைப்படுகிறார்! ஏமாற்றுக்காரர்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய், திடீரென அரசியலுக்கு வந்தது பெரிய பேசுபொருளாக மாறியது. "தமிழக வெற்றி கழகம்" என்ற கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் இறங்கியதும், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் ஒரு எதிர்பார்ப்பு உருவானது. பலர் இதை ஒரு புதிய மாற்றத்துக்கான முயற்சி என்று பாராட்டினாலும், சிலர் இது சரியான நேரமா, உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஓட அரசியல் வருகை குறித்து இசை அமைப்பாளரும் தொகுப்பாளரும் ஆன ஜேம்ஸ் வசந்தன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் பற்றிய சர்ச்சைகள்
விஜயின் அரசியல் பயணம் ஆரம்பித்த பிறகு ஆதரவும் எதிர்ப்பும் இரண்டும் சமமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த சில சர்ச்சைகள், குடும்ப வாழ்க்கையைச் சுற்றிய விவாதங்கள், பொதுவெளியில் அவர் எடுத்த சில முடிவுகள் போன்றவை, முன்பிருந்த நல்ல பெயருக்கு சிறிது பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில், "இது எல்லாம் அரசியலில் சாதாரணம் தான்" என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
இந்த சூழ்நிலையில்தான் இசையமைப்பாளரும், தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் விஜய்யை குறித்து கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ஆரம்பம் முதலே விஜய்யின் அரசியல் நகர்வுகளை அவர் ஓபனாக விமர்சித்து வருகிறார்.
அவர் பேசியதாவது, "விஜய் ஒன்றும் தூய்மையானவர் இல்லை. சினிமாவில் கிடைக்கும் பெரிய வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சும்மா சேவை மனப்பான்மை காரணமாக இல்லை. இங்கிருக்கும் வாய்ப்புகளை பார்த்துதான் வருகிறார். அவருக்கு பின்னால் இருக்கிறவர்கள் யார், யார் ஆலோசனை கொடுக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். எல்லாமே திட்டமிட்ட நடைமுறையில்தான் நடக்கிறது. இதை அவரை பின்தொடர்பவர்களில் சிலர் நம்ப மாட்டார்கள், சிலருக்கு புரியாது. ஆனால் உண்மை தெரிந்தவர்களுக்கு இது தெளிவாக தெரியும்" என்று கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு
அதோடு, "விஜய்யை பார்த்து நாமும் இப்படிச் சம்பாதிக்கலாம் என்று நம்பி, சொந்தமாக இருந்த நிலம், வீடு எல்லாம் விற்று தேர்தலில் நிற்கும் சிலர், முடிவில் பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள். அதில் சிலர் தவறான முடிவுகளையும் எடுக்க நேரிடலாம். இது நடக்கவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு என்னிடம் கேளுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "ஒருவரின் கண்களையும் உடல் மொழியையும் பார்த்தாலே அவர் எப்படி இருப்பார் என்பதை உணர முடியும். அந்த வகையில் விஜய்யைப் பார்த்தால், அவர் ஒரு ஏமாற்றுக்காரர், பித்தலாட்டக்காரர் என்று எனக்கு தோன்றுகிறது. அதனால்தான் நான் இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறேன்" என்று மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
ரசிகர்கள் கருத்து
ஜேம்ஸ் வசந்தன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு வழக்கம்போல விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து, அவரை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகையைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பேச்சு மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications