சிங்கப்பூரை ஏவிஎம்மில் காட்டிய மேஜிக் சரவணன்.. ஓடாத படத்தையும் ஓடவைத்து.. தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை
சென்னை: சினிமாவில் ஏவிஎம்மின் பங்கு என்ன என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.. ஏவிஎம் சரவணனுக்கு நிச்சயமாக ஒரு நல்ல மரியாதை செய்யப்பட வேண்டும்... இதை இந்த அரசு செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் கலைஞருடனும், ஸ்டாலினுடனும், உதயநிதியுடனும் நல்ல நட்பில் இருந்தவர் சரவணன் என்பதால், அரசாங்கம் அவருக்கு உண்டான முறை மரியாதையைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பேட்டி ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார் முக்தா ரவி.
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பாளர் முக்தா ரவி, "ஏவிஎம் நிறுவனத்தை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா வரலாற்றை பேச முடியாது என்ற நிலை உள்ளது...

ஏவிஎம் சரவணன் "டவுன் டு எர்த்"
ஏவிஎம் சரவணன் "டவுன் டு எர்த்" என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்.. அன்று முதலமைச்சராக இருந்த MGR முதல் கடைசி லைட் மேன் வரை அனைவருடனும் பேசி, பழகியவர்.. தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களின் கஷ்டங்களை குறைகளை போக்கியவர்...
ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை நிர்வகித்து வளர்த்தெடுத்தவர் ஏவிஎம் சரவணன்.. தமிழ் சினிமா இன்று எப்படி இருக்க வேண்டும், ஒரு நல்ல தலைமையை எப்படி உருவாக்குவது என்பதை சரவணனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்..
அமைதியான குணம்
நடிகர் ஜெய்சங்கர், சிவகுமார், சிவாஜி கணேசன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் துணை முதல்வர் உதயநிதி உட்பட அனைவருடனும் நல்ல நட்புடன் இருந்தவர்..
சரவணன் அமைதியான குணத்தை கொண்டவர்.. யாருக்கும் தன்னால் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது, என்று நினைப்பார்.. அவர் கோபப்பட்டு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்.. பணத்தைவிட நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்..
நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊர் சிங்காரி சிங்கப்பூரு வந்தாராம் என்ற பாட்டின் பேட்ச்-ஒர்க் ஒர்க் முடியாமல் இருந்தது.. உடனே அந்த பாட்டினை ஏவிஎம்மில் எடுக்க இலவசமாக அனுமதி தந்துவிட்டார்.. அந்த பாட்டை பார்த்தால் நிஜமாகவே சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது போலவே இருக்கும்.. இப்படி அவசரம் ஆபத்து என்றால், ஓடிவந்து உதவக்கூடியவர் சரவணன்.
கதை ஞானம் கொண்ட சரவணன்
அதேபோல நல்ல கதைஞானம் உள்ளவர் சரவணன்.. ஓடாத படத்தையும் ஓட்டி காட்டிவிடுவார்.. இப்படித்தான் ஒருமுறை 'உறவுக்கு கை கொடுப்போம்' என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ஒய்ஜி மகேந்திரன் டைரக்ட் செய்த படம் படுதோல்வியை சந்தித்தது.. அதே கதையை சில வருடங்கள் கழித்து, சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றி தந்தார் விசு... அதுதான் சம்சாரம் அது மின்சாரம்.
இந்த படத்தில் கிராமத்து பெண் கேரக்டர் இருந்தால் நன்றாக இருக்கு சொல்லி, மனோரமா கேரக்டரை சொன்னதே சரவணன்தான்.. இந்த படத்துக்காக ஒரு வீட்டையே ஏவிஎம்மில் கட்டி தந்தார்..
மேஜிக் சரவணன்
சரவணனை யாருமே ஒரு பெரிய ஆளாக பார்க்கவில்லை.. எல்லாருமே அவரிடம் நட்புடன் மட்டுமே பேசுவார்கள்.. இசை ஞானம், இலக்கிய ஞானம் உள்ளவர்.. கம்பன் விழா எடுப்பார்.. முழுமையான மனிதனாக அவரை நான் எப்போதுமே பார்ப்பேன்.
ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.. அதேபோல ஸ்டுடியோவை அவர் எப்படி நடத்தினார் என்பதை ஒரு டாக்குமென்ட்ரியாக எடுத்து, இன்றைய சினிமா துறையினர் தெரிந்துகொள்ள வகை செய்ய வேண்டும்
தமிழக அரசுக்கு கோரிக்கை
சினிமாவில் ஏவிஎம்மின் பங்கு என்ன என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.. ஏவிஎம் சரவணனுக்கு நிச்சயமாக ஒரு நல்ல மரியாதை செய்யப்பட வேண்டும்...ஏனென்றால் கலைஞருடனும், ஸ்டாலினுடனும், உதயநிதியுடனும் நல்ல நட்பில் இருந்தவர் சரவணன் என்பதால், அரசாங்கம் அவருக்கு உண்டான முறை மரியாதையைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications