விஜயை பிடிக்கும், அவரை பார்த்து சினிமாவுக்குள் வந்தேன்! ஆனால், இப்போ..! மாரி செல்வராஜ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj Praises Vijay) சமீபத்தில் பேசிய சில வரிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. குறிப்பாக நடிகரும், தற்போது அரசியல் களத்திலும் இறங்கியுள்ள விஜய் குறித்து அவர் சொன்ன கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், எந்தவித தயக்கமும் இல்லாமல், "விஜய்யின் சினிமா மீது எனக்கு ரொம்ப பிரியம். நான் சினிமாவை நோக்கி நகர அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனா விஜயை எனக்கு பிடிக்கும்" என்று நேராக சொல்லியிருக்கிறார். அதோடு அரசியல் பற்றி பேசும்போது, "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்யலாம்... அதை நாம வரவேற்கணும்... வாழ்த்தணும் என்று கூறி இருக்கிறார்.

Mari Selvaraj Vijay

மேலும், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு என்ன செய்யப் போகிறார் என்பதை மக்களுக்கு போல நானும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருடைய கொள்கை மற்றும் செயல்பாடை பொறுத்துதான் அவர்களுடைய மதிப்பு உயிரும் அதேபோல விஜய் உடைய கொள்கை மற்றும் செயல்பாட்டை பார்ப்பதற்காக நானும் காத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

இந்த ஒரு பேச்சிலேயே இரண்டு விஷயங்கள் ரசிகர்களுக்கு கிளியரானது.
ஒரு இயக்குநராக உயர்ந்த பிறகும், தன்னை ஊக்குவித்த ஹீரோவை மறக்காமல் சொல்லும் நெஞ்சளவு... இன்னொரு பக்கம், அரசியல் வந்தவரை விமர்சிக்காமல், அவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து தான் மதிப்பிட வேண்டும் என்ற நிலைப்பாடு என்ன ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

விஜயின் அரசியல் பயணம்

விஜய் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு பல வருடங்களாக இருந்தது. அதற்கு full stop வைத்த மாதிரி தான் அவர் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்தது. அதன் பிறகு அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும் அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது.

மக்கள் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து கருத்து சொல்வது, மாணவர்களுடன் சந்திப்பு, கட்சியின் கொள்கை பற்றி பேசுவது - எல்லாமே அவரை ஒரு நடிகரிலிருந்து அரசியல் தலைவராக மாற்றும் படியாக இருக்கிறது.

சர்ச்சைகள் இல்லாம போகவில்லை

அரசியலுக்கு வந்தவுடன் பாராட்டுகள் மட்டும் இல்லாமல் விமர்சனங்களும் வருவது இயல்புதான். விஜய்க்கும் அது விதிவிலக்காக இல்லை. ஏற்கனவே அவருடைய கட்சி மாநாட்டில் நடந்த உயிரிழப்புகள் பற்றிய பேச்சு அதிகமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் உடைய மனைவி அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நேற்று சோசியல் மீடியாவில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய வதந்திகளும் இணையத்தில் பேசப்பட்டதால், அது கூட அரசியல் கோணத்தில் விவாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த எல்லா விஷயங்களுக்கும் அவர் நேரடியாக பதில் சொல்லாமல், தனது அரசியல் பயணத்தை மெதுவாக கட்டி கொண்டு போகும் ஸ்டைலை தான் தேர்வு செய்திருக்கிறார்.

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் சாதாரண இயக்குநர் அல்ல. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற சமூக அரசியல் பேசும் படங்களை எடுத்தவர். அப்படிப்பட்ட ஒருவர் விஜயை பற்றி பேசும்போது அது சாதாரண ரசிகன் appreciation மாதிரி இல்ல... ஒரு சமூக பார்வையுடன் வரும் கருத்தாக தான் பார்க்கப்படுகிறது.

அவர் விஜயை நேரடியாக அரசியல் ரீதியாக ஆதரிக்கவும் இல்லை... விமர்சிக்கவும் இல்லை... "அவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து புரிந்து கொள்ளலாம்" என்ற வரி தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+