Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டோவில் வந்திறங்கிய பிரபல நடிகை.. கல்யாணமே செய்துக்கல காஞ்சனா.. துரோகத்தால் வீழ்ந்த பட்டத்து ராணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை காஞ்சனாவுக்கு 80 வயதுக்கு மேலாகிறது.. தினமும் யோகா பயிற்சி செய்து வருவதுடன், ஆன்மீகத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார்... சமீபத்தில் மறைந்த ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆட்டோவில் வந்திருந்தார் மஞ்சுளா.. இது பலரது கவனத்தையும், வியப்பையும் பெற்று வருகிறது.. நடிகை காஞ்சனா குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நடிகை காஞ்சனாவின் உண்மையான பெயர் வசுந்தரா தேவி.. இவர் ஆரம்பத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்தவர்.. அப்போது விமானத்தில் ஸ்ரீதர் சார் பார்த்தபோதுதான், நடிப்பதற்கு அழைத்தார்.

Cinema Kanchana Share Auto

ஸ்ரீதர் இயக்கிய காமெடி படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகப்படுத்தினார். ட்ரெண்ட் செட்டிங் படமாக காதலிக்க நேரமில்லை அமைந்தது. அந்த படத்துக்கு டைட்டிலில் காஞ்சனா என்று பெயர் போடப்பட்டது.

வசுந்தராதேவி டூ காஞ்சனா

காரணம், நடிகை வைஜெயந்தி மாலாவின் அம்மாவின் பெயரும் வசுந்தரா தேவிதான்.. அவரும் சினிமாவில் நடிகை என்பதால், குழப்பம் ஏற்படும் என்பதால், காஞ்சனா என்று ஸ்ரீதர் சார்தான் மாற்றியிருக்கிறார்.

இதற்கு பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் தொடர்ந்து 30 வயது வரை பிரபலமான கதாநாயகியாகவே நடித்தவர் காஞ்சனா.. அந்தவகையில் மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்..

சிவந்த மண் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தார்.. "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" என்ற பாட்டுக்காகவே அந்த படம் ஓடியது.. ஜெமினி கணேசனுடன் சாந்தி நிலையம், உத்தரவின்றி உள்ளே வா, ஸ்ரீ கிருஷ்ண அவதாரம், நான் ஏன் பிறந்தேன், பறக்கும் பாவை. அதே கண்கள், பாமா விஜயம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாயின்.

காஞ்சனா சொத்து

காஞ்சனா 30 வயது வரை நடித்து கொண்டேயிருந்தார்.. இதனால் ஏகப்பட்ட சொத்துக்களை சம்பாதித்தார்.. குறிப்பாக சென்னை தி.நகர், GN செட்டி ரோட்டில் ஒரு பெரிய இடம் அதாவது சுமார் 8 கிரவுண்ட் வாங்கி போட்டிருந்தார். ஆனால் உறவினர்கள் அந்த சொத்துக்களை காஞ்சனாவுக்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்.

இதற்காகவே 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப் போராட்டம் நடத்தினார்.. கோர்ட் படி ஏறி கொண்டேயிருந்தார்.. இறுதியில் அந்த அதில் பாதி சொத்துக்களை மட்டுமே அவரால் மீட்க முடிந்தது.

சொந்தங்களின் துரோகம்

தொடர்ந்து பிசியாகவே படங்களில் நடித்து கொண்டிருந்ததாலும், சட்ட போராட்டத்தின் காரணமாகவும், சொந்தக்காரர்களின் துரோகத்தாலும், திருமணத்தை பற்றி கவனமே செலுத்தாமல் போய்விட்டார்.. கடைசிவரை காஞ்சனா திருமணம் செய்து கொள்ளவில்லை..

சென்னை தி.நகரில் ரூபாய் 80 கோடி சொத்தை, தான் வேண்டிக் கொண்டபடியே திருப்பதி தேவஸ்தானத்திற்கு காணிக்கையாக தந்துவிட்டார். திநகர் பகுதியில் தங்கியிருக்கும் காஞ்சனா, ஷேர் ஆட்டோவில் அவ்வப்போது இந்த கோயிலுக்கு சென்று, மணிக்கணக்கில் அங்கேயே மன அமைதிக்காக உட்கார்ந்திருப்பார்..

ஷேர் ஆட்டோவில் நடிகை

ஷேர் ஆட்டோவில் காஞ்சனா போகிறார், அவரிடம் பணமில்லை என்று நிறைய பேர் கிளப்பி விடுகிறார்கள்.. ஆனால் உண்மை அது கிடையாது.

ஒருகாலத்தில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தேன், பேர், புகழ் கிடைத்துவிட்டது..
அதுவே எனக்கு போதும், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று மனநிறைவுடன் சொல்கிறார் காஞ்சனா" என்றெல்லாம் பாலாஜி பிரபு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கல்யாணம் செய்யாத நடிகை

உண்மையிலேயே காஞ்சனாவை பொறுத்தவரை, திருமணம், குழந்தைகள் என்று வாழத்தான் ஆரம்பத்திலிருந்து ஆசைப்பட்டுள்ளார். ஆனால், காஞ்சனாவின் வருமானத்தை இழக்க பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் மனமில்லை.. கல்யாண பேச்சு வரும்போதெல்லாம், இப்போது என்ன அவசரம்? அப்பறம் பார்த்துக்கலாம்? என்று இழுத்தடித்தார்களாம்.

ஒரு கட்டத்தில் காஞ்சனா கல்யாண வயதையே தாண்டிவிட்டார்.. 30 வயதை கடந்த நிலையில் அதன்பிறகு அவருக்கே கல்யாண ஆசையும் வராமலேயே போய்விட்டது..

ரூ.100 கோடி சொத்துக்கள்

சம்பாதித்த சொத்துக்களைத் தன்னுடைய சொந்தக்காரர்களை நம்பி அவர்கள் பெயரில் பதிவு செய்தார் காஞ்சனா.. சம்பாதித்து பணம் தரும்போதெல்லாம், "உன் பணத்திலேதான் அங்கே இடம், இங்கே இடம் வாங்கினோம் என்றெல்லாம் உறவுகள் சொல்லின.. ஆனால், ஓய்வெடுக்க தனக்காக ஒரு வீட்டை கேட்டபோது, யாருமே தர முன்வரவில்லை.. மொத்த சொந்தக்காரர்களும் காஞ்சனாவின் சொத்துக்களை திருப்பி தர மறுத்துவிட்டனர்..

இதனால் இழந்த ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துக்களை மீட்க முடிவெடுத்தார்.. இது தன்னுடைய சொத்தின் மீதான ஆசையில் கிடையாது, தனக்கு முதுகில் குத்தியவர்களின் துரோகத்தை காஞ்சனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

இங்குதான் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டுள்ளது.. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் காஞ்சனா என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, கவியரசர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் தன்னுடைய முகநூல் பதிவில், "சமூக வலைதளத்தில் பகிரப்படுவது மிகவும் தவறான தகவல் என்றும் தி.நகரில் சகோதரியின் மகன் வீட்டில் இருப்பதாகவும், அப்பார்ட்மென்ட்ட வாடகை மட்டுமே ஒரு 2 லட்சம் ரூபாய்க்கு மேல வருவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+