பல துரோகமும், ஏமாற்றமும் நடந்து இருக்கு.. யாரும் துணை இல்ல.. உருக்கமாக பேசிய ராதிகா சரத்குமார்
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகள் துரோகங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார் அதோடு தன்னுடைய அனுபவத்தின் மூலமாக அவர் அட்வைஸும் கொடுத்திருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் ராதிகா பேசும்போது, வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள், மனதளவில் உடைந்து போன தருணங்கள், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதைக் குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒருகட்டத்தில் மனசு உடைந்து போகும் சூழ்நிலை வரும். நம்பியவர்களிடமிருந்து வரும் துரோகம், தொடர்ந்து சந்திக்கும் ஏமாற்றங்கள், சில நேரங்களில் குடும்ப உறவுகளிலேயே ஏற்படும் மனவருத்தங்கள் - இவை எல்லாம் மனிதனை உள்ளுக்குள் கஷ்டப்படுத்தும். இதுபோன்ற பல அனுபவங்களைத் தான் சந்தித்ததாக ராதிகா கூறியுள்ளார். அந்த காலகட்டங்களுக்குப் பிறகுதான் எதையும் தாங்கிக்கொள்ளும் மனநிலை தனக்கு வந்தது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
நடிகை ராதிகா பேட்டி
அதே நேரத்தில், வாழ்க்கையை மற்றவர்களை மட்டும் நம்பி ஓட்டக்கூடாது என்று ராதிகா கூறியிருக்கிறார். மேலும் கணவன், பிள்ளைகள், குடும்பம் எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆனால் "அவர்கள் தான் என்னை பார்த்துக்கொள்வார்கள்" என்ற எதிர்பார்ப்பில் மட்டும் வாழ்ந்தால், அது ஒருநாள் ஏமாற்றமாக மாறும் என்பதே அவரது கருத்து.
செல்ஃப் லவ்
முதலில் நம்மை நாமே பார்த்துக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். பிறகு குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தால், நம்முடைய முன்னேற்றமே நின்று போய்விடும் என்றும் ராதிகா பேசியுள்ளார்.
மேலும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் அதற்காக நம்மையே முழுக்க முழுக்க மறந்து விடக்கூடாது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தை கவனிப்பது பொறுப்பு என்றாலும், எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களை சார்ந்து மட்டுமே வாழும் நிலைக்கு போகக்கூடாது என்றார். அப்படி நடந்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கே ஒருநாள் நாம் பாரமாக மாறும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சினிமா பயணம்
ராதிகா சினிமாவில் நீண்ட காலமாக பயணம் செய்து வருபவர். கதாநாயகியாக இருந்த காலத்திலிருந்து, இப்போது அம்மா, குணச்சித்திர வேடங்கள் வரை காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடித்துவருகிறார். திரையில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கடந்து வந்த அனுபவம்தான் இப்படி பேச வைத்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண சர்ச்சை
நடிகர் சரத்குமாரை ராதிகா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட போது அதிகமான விமர்சனங்கள் எழுந்ததாகவும் அது கண்டு தான் முதலில் வருத்தமடைந்ததாகவும் பின்பு அதை கண்டு கொள்ளவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். தனது நடிப்பு பயணத்தையும் தொடர்ந்து கவனித்து வரும் ராதிகா, தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சவால்களை மறைக்காமல் பேசுவது பலருக்கும் நெருக்கமாக உணரச் செய்துள்ளது.
மொத்தத்தில், அவர் பேசிய விஷயங்கள் பெரிய அறிவுரை மாதிரி இல்லாமல், வாழ்க்கையில் பலர் கடந்து வந்த உண்மை அனுபவங்கள் போலவே இருந்ததால் தான் இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications