கல்யாணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த நகையின் விலை இத்தனை கோடியா? அதுவும் எத்தனை பவுன் தங்கம் தெரியுமா?
சென்னை: தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் மிகவும் விரும்பி பேசிக் கொண்டிருந்த ஜோடி என்றால் அது நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா (Rashmika Mandanna-Vijay Deverakonda) தான். "இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்கிறார்கள்?" என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அண்மையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் அழகிய நகரமான உதய்பூர் நகரில், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பெரிய அளவிலான மீடியா கவனம் இல்லாமல், மிகவும் நெருக்கமானவர்களுக்குள் மட்டுமே நடந்த இந்த விழா தான் இப்போது அதிகம் பேசப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்ததால், திருமண புகைப்படங்கள் வெளியே வராமல் இருந்தது பிறகு இருவரும் தங்களுடைய சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.
திருமணத்தைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் மிகப்பெரிய ரிசப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விழாவில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழித் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது இந்த வருடத்தின் மிகப்பெரிய சினிமா விழாக்களில் ஒன்றாக இருக்கும் எனவும் பேசப்படுகிறது.

ராஷ்மிகாவின் நகை மதிப்பு
திருமணத்தில் மணமக்கள் அணிந்திருந்த நகைகளும் தனியே பேசுபொருளாகி இருக்கிறது. பாரம்பரிய வடிவமைப்பில் முழுக்க கைவேலையாக செய்யப்பட்ட அந்த நகைகளின் மதிப்பு ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மொத்த எடை மட்டும் பார்த்தாலும் சுமார் 2 முதல் 3 கிலோ வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ராஷ்மிகா பாரம்பரிய தென்னிந்திய மணப்பெண் லுக்கில் மின்னி இருந்தார், விஜய் தேவரகொண்டா எளிமையான ஆனால் ஸ்பெஷல் ஸ்டைலில் தோன்றியிருந்தார்.
இவர்கள் இருவரின் நட்பு எப்போது காதலாக மாறியது என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்களிடம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம், இவர்கள் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம். அந்த படத்தில் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு வந்த டியர் காம்ரேட் படம் இவர்களின் இணைப்பை இன்னும் வலுப்படுத்தியது.
படப்பிடிப்புக்கு வெளியிலும் இருவரும் ஒன்றாக காணப்பட்ட பல தருணங்கள், வெளிநாட்டு சுற்றுலா புகைப்படங்கள், ஒரே இடங்களில் விழாக்கள் கொண்டாடிய சம்பவங்கள் - இவை எல்லாம் இவர்களின் காதல் பற்றிய வதந்திகளை மேலும் அதிகரித்தன. ஆனாலும் இருவரும் தொடர்ந்து "நல்ல நண்பர்கள்" என்ற பதிலையே கூறி வந்தனர்.
ராஷ்மிகா மந்தனா இன்று பான் இந்தியா அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். "நேஷனல் கிரஷ்" என்ற பட்டமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்தது. அதேபோல் விஜய் தேவரகொண்டா "அர்ஜுன் ரெட்டி" படத்தின் மூலம் ஒரு தலைமுறையையே கவர்ந்த நடிகராக மாறினார். அவரது ஸ்டைல், பேச்சு, திரைத் தோற்றம் - இவை அனைத்தும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டது.
இந்த திருமண செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டம் செய்து வருகிறார்கள். "ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆனது", "கீதா கோவிந்தம் ஜோடி ரியல் லைஃபில் சேர்ந்தது" போன்ற கருத்துகள் வைரலாகி வருகின்றன. பல வருடங்களாக கிசுகிசுக்களாக இருந்த காதல் - இப்போது அமைதியாக நடந்த திருமணம் - வரவிருக்கும் பிரமாண்ட ரிசப்ஷன்... இவை எல்லாம் சேர்ந்து இந்த ஜோடியை மீண்டும் தென்னிந்திய சினிமாவின் டாப் டிரெண்டாக மாற்றி விட்டது.












Click it and Unblock the Notifications