S. Janaki Son Murali Krishna: தமிழ் சினிமாவில் சோகம்.. பாடகி ஜானகியின் மகன் திடீர் இறப்பு.. வருத்தத்தில் குடும்பம்
சென்னை: (singer S. Janaki Son Murali Krishna Passes Away) இந்திய சினிமாவின் பொன்னான காலகட்டத்தை தனது குரலால் உயிர்ப்பித்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, இன்று (ஜனவரி 22) காலமானார். அவர் ஹைதராபாத்தில் தன்னுடைய அம்மா மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு திரையுலகத்தையும், இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

முரளி கிருஷ்ணா
முரளி கிருஷ்ணா, புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் ஒரே மகன். திரையுலகப் பின்னணியில் வளர்ந்தாலும், அவர் விளம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, நடிப்பு மற்றும் கலை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார். சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்ததாக கூறப்படுகிறது.
அவரது மனைவி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற்ற நடன கலைஞராக உள்ளார்.
ஆனாலும் அவருடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார். அதுபோல தனது குழந்தைகளுக்கும் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டு தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தார். பிரபலமான தாயின் மகனாக இருந்தாலும், அதிக வெளிச்சம் வேண்டாம் என்ற மனநிலையுடன், அமைதியான வாழ்க்கையையே முரளி கிருஷ்ணா தேர்ந்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ். ஜானகி - இசை உலகின் ஜாம்பவான்
எஸ். ஜானகி என்ற பெயர், தென்னிந்திய சினிமா இசை உலகில் ஒரு பெரும் சக்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, பல தலைமுறைகளின் மனதில் இடம் பிடித்தவர். தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மபூஷண் உள்ளிட்ட எண்ணற்ற கௌரவங்களை பெற்றவர்.
அப்படிப்பட்ட இசை மாமனிதரின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, இசை உலகிற்கு ஒரு பெரிய வேதனையாக பார்க்கப்படுகிறது.
திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் இரங்கல்
முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு, பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
"எஸ். ஜானகி அம்மாவின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய இழப்பு", ஒரு தாய்க்கு மகனை இழப்பது சொல்ல முடியாத வலி" என ரசிகர்கள் உணர்வுபூர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.
இறுதி சடங்கு விவரங்கள்
முரளி கிருஷ்ணாவின் இறுதி சடங்கு தொடர்பான விவரங்கள் விரைவில் குடும்பத்தினர் மூலம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. தாயாரான எஸ். ஜானகியுடன் நெருங்கியவர்கள் இந்த துயர நேரத்தில் உடனிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications