பிரபுவுக்கு ஜப்தி நேரத்தில் போன அந்த மெசேஜ்! சிவாஜியின் அன்னை இல்லம் வீடு பற்றி சித்தர் தந்த ரகசியம்
சென்னை: திருநெல்வேலி படத்தில் ரோஜா நடித்திருந்தார்.. குயில் என்ற ஆம்பளத்தனமான கேரக்டரில் நடித்திருந்தார்.. ரோஜாவிடம் கவர்ச்சியாக நடிக்கக்கூடிய தன்மை உண்டு, காமெடியாகவும் நடிக்கக்கூடியவர், ஆக்ஷன் ஹீரோயினாகவும் நடிக்கக்கூடியவர்.. மொத்தத்தில் பன்முகம் கொண்ட நடிகை ரோஜா" என்று பாராட்டி உள்ளார் இயக்குனர் பாரதி கண்ணன்.
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருபவர் டைரக்டர் பாரதி கண்ணன்...

இவர் கண்ணாத்தாள் என்ற படத்தை எடுத்து ஹிட் தந்திருந்தார்.. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்தது குறித்து ஒரு பேட்டியில் பாரதி கண்ணன் கூறியிருந்தார்.
இளையராஜா வாழ்த்து
அதில், "நான் இளையராஜாவை சந்திக்க சென்றபோது, நல்லவேளையாக அவர் எந்த வேலையும் இல்லாமல் இருந்தார். அப்பொழுது அவரிடம் படத்தின் கதையை பேச ஆரம்பித்தேன்.. ஆனால் படத்தில் வரும் காமெடி சீன்களை பற்றி நான் சொல்லவே இல்லை.. காரணம், இளையராஜாவிற்கு காமெடி சீன்கள் பிடிக்காது. எனவே அந்த வடிவேலு காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு இந்த கதையை ஒரு மணி நேரம் சொன்னேன்..
அதை கேட்ட இளையராஜா, அந்த காலத்தில் பழையனூர் நீலி என்கிற ஒரு படம் வந்தது. அந்த படம் நல்ல வெற்றியை தந்தது.. .அந்த படத்தின் கதை போலவே உன்னுடைய கதையும் உள்ளது.. இதை நீ நல்லபடியாக எடுத்து விட்டால் இந்த படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று வாழ்த்தினார்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் பாரதி கண்ணன்.
நடிகர் பிரபு - குழந்தை மனம்
இந்நிலையில், Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல இயக்குனர் பாரதி கண்ணன், நடிகர் பிரபு பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதில், "பிரபு சார் அற்புதமான நடிகர்.. கதை மட்டுமல்லாமல், அந்த யூனிட், டைரக்டர், தயாரிப்பாளர் உட்பட அத்தனை விஷயங்களையும் கவனிப்பார். அவரது நடனங்களில் ஸ்பெஷல் ஸ்டைல் இருக்கும்.. சோகம், காமெடி, ஆக்ஷன் என அனைத்துக்குமே பொருந்தக்கூடிய நபர்.. முகம் லட்சணமாக உள்ளவர்..
இப்போதுவரை முக சுருக்கம் எதுவும் இல்லாமல், மனதில் அதே குழந்தைத்தனத்துடன் இருக்கிறார்.. நான் இயக்கிய திருநெல்வேலி படத்தில் நடித்திருந்தார்..
பந்தா இல்லாத பிரபு
பிளாஷ்பேக்கில் காதல், காதல் தோல்வி போன்றவை இருந்தாலும், வயதான கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதில் தன்னுடைய மீசை மற்றும் பாடல் காட்சிகளில் தீச்சட்டி தூக்குவது போன்ற நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தினார்.. அந்த கெட்டப்பில் அழகாகவும் இருந்தார்.. மிகப்பெரிய நடிகரின் மகன் என்ற பந்தா பிரபுவிடம் இருக்காது.. குழந்தைத்தனம் மிக்கவர். அவரை வைத்து திருநெல்வேலி படம் எடுத்தது ரொம்ப மகிழ்ச்சி.
சிவாஜியின் அன்னை இல்லம்
சிவாஜியின் வீடு ஜப்தி என்றதுமே உடனே பிரபுவுக்கு போன் செய்து பேசினேன்.. "எங்க ஊரில் போத்தி ஐயா என்ற சித்தர் உள்ளார்.. அவரிடமிருந்து எனக்கு உத்தரவு வந்துவிட்டது. அதன்படி இந்த அன்னை இல்லம் உங்கள் கையை விட்டு போகாது,
எத்தனை வழக்கு போட்டாலும்சரி, நீங்கள்தான் வெல்வீர்கள், உங்கள் விருப்பமில்லாமல் அன்னை இல்லம் யாரிடமும் போகாது" என்று அவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டேன். அதன்படியே கடைசியில் நடந்தது. இதற்காக சித்தருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
நடிகை ரோஜா - பன்முகம் கொண்ட நடிகை
திருநெல்வேலி படத்தில் ரோஜா நடித்திருந்தார்.. குயில் என்ற ஆம்பளத்தனமான கேரக்டரில் நடித்திருந்தார்.. ரோஜாவிடம் கவர்ச்சியாக நடிக்கக்கூடிய தன்மை உண்டு, காமெடியாகவும் நடிக்கக்கூடியவர், ஆக்ஷன் ஹீரோயினாகவும் நடிக்கக்கூடியவர்.. மொத்தத்தில் பன்முகம் கொண்ட நடிகை ரோஜா..
அரசியலுக்கு அவர் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவரது திறமைக்கு குறைவாகவே நடிக்கிறார் என்று மட்டும் தெரிந்தது.. அரசியலில் மிகப்பெரிய வாழ்க்கையை வாழ்வார் என்று ஜாதகத்தில் அவருக்கு அமைந்திருக்கலாம்.. திட்டமிட்டு அரசியல்வாதியாக வரவேண்டும் என்று நினைக்காவிட்டாலும் காலத்தின் கட்டாயம் என்றுகூட சொல்லலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications