அவங்க தியாகத்தை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. சந்தோஷமாக அடுத்த படத்தின் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'பராசக்தி'. டான் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீலீலா நாயகியாகவும் நடித்திருந்தார்.
அதர்வா முரளி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இந்தப் படம், அவருக்கான 100வது திரைப்படமாக அமைந்தது. அதே நேரத்தில், சிவகார்த்திகேயனுக்கான 25வது திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.

பராசக்தி
1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர் போராட்டங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது 'பராசக்தி'. சமூக அரசியல் பேசும் கதை என்பதால் படம் வெளியானபோது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சிலர் படத்தின் கருத்தை பாராட்டியிருந்தாலும், சிலர் திரைக்கதை மற்றும் வேகத்தில் குறை கூறினர். இருப்பினும், வசூலில் படம் பெரிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து, பொங்கல் ரிலீஸ்களில் முக்கியமான வெற்றிப் படமாக தன்னை நிலைநாட்டியது.
பராசக்தி ஓடிடி வெளியீட்டு தேதி
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'பராசக்தி' படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். தற்போது அந்த எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது. வரும் 7ஆம் தேதி 'ஜீ5' ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஜீ5 நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசினார்.
அதில் அவர், "பராசக்தி படத்தை எல்லாரும் தியேட்டரில் பார்த்து ரசித்திருப்பீர்கள். இப்போது அது ஜீ5-ல் வெளியாகப் போகிறது. இன்று நாம் சுதந்திரமாக தமிழ் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கு முன்னோர்கள் பலர் போராடியதும், தங்கள் உயிரைத் தியாகம் செய்ததுமே காரணம். அந்த தியாகத்தின் அர்த்தத்தை உணர இந்தப் படத்தை பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, படத்தின் கருத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.
திருச்செந்தூரில் குடும்பத்துடன் வழிபாடு
இதற்கிடையில், சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தனது இரு மகன்களுக்கும் முடி காணிக்கை செலுத்தி, குடும்பத்துடன் வழிபாடு செய்தார். கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதாக கூறி நன்றி தெரிவித்தார்.
"14 வருடங்களில் சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. நல்ல மனிதர்களையும், மக்களுடைய அன்பையும் பெற்றிருக்கிறேன். ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல அடுத்த ஒரு படம் விரைவில் வரப்போகிறது. அதற்கான பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டன. சீக்கிரமே அதிகாரப்பூர்வ அப்டேட் கொடுக்கப் போகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்ன மாதிரி படங்களை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்களோ, அதே மாதிரியான ஒரு படத்தில்தான் நான் நடிக்கப் போகிறேன்" என்று அவர் கூறினார்.

மீண்டும் பழைய சிவகார்த்திகேயன்
சமீப காலமாக ஆக்சன் மற்றும் சமூகக் கருத்துள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் சிவகார்த்திகேயன், மீண்டும் தனது ஆரம்ப கால காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த எண்டர்டெய்னர் படங்களில் நடிக்கப் போவதாகக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 'மெரினா', 'மான் கராத்தே', 'ரஜினிமுருகன்', 'ரெமோ' போன்ற படங்களில் அவர் காட்டிய எளிமையான, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய கதாபாத்திரங்களை மீண்டும் திரையில் காண விரும்புவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'பராசக்தி' ஓடிடியில் வெளியாகும் நிலையில், அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காகவும், சிவகார்த்திகேயன் எந்த மாதிரியான கதையைத் தேர்வு செய்வார் என்பதற்காகவும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications