Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகார்த்திகேயன் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல.. நேராகவே இப்படி பண்ணினாரு! இயக்குனர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 10ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. அந்த படம் வெளியாகும் போது பல சிக்கல்கள் வந்தது அப்போது அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அந்த நேரத்தில் அவர் செய்த செயல் குறித்து இயக்குனர் ரா சரவணன் பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

இயக்குநர் இரா. சரவணன் சமீபத்தில் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், சிவகார்த்திகேயனுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பொதுவாகவே திரையுலகில் பிரபலங்களுடன் பழகினாலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தனக்கு பெரிதாக தோன்றியதில்லை என்கிறார். ஆனால் இந்த முறை, சிவகார்த்திகேயன் செய்த ஒரு செயல், அந்த எண்ணத்தை இயல்பாக உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan Parasakthi

'பராசக்தி' படம் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். சென்சார் பிரச்சினைகள், வெளியீட்டு அழுத்தங்கள் என சிவகார்த்திகேயன் மீது பல்வேறு பொறுப்புகள் இருந்த காலகட்டம் அது. அப்படியான ஒரு பரபரப்பான சூழ்நிலையில், தந்தையை இழந்த ஒரு கல்லூரி மாணவி தனது செமஸ்டர் கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததாக சரவணன் கூறுகிறார்.

இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் என்ற நிலையில், பலரை அணுகியும் உதவி கிடைக்காததால் மனமுடைந்த அந்த மாணவியின் குரல், அவரை மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாக்கியதாக அவர் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த தருணத்தில், சிவகார்த்திகேயன் முகம் தான் சரவணனுக்கு நினைவுக்கு வந்ததாம். ஆனால் இது படம் ரிலீஸ் நேரம், சிவகார்த்திகேயனை தொந்தரவு செய்யலாமா?" என்ற தயக்கம் இருந்தபோதும், வேறு வழியின்றி மெசேஜ் அனுப்பியதாக கூறுகிறார்.

ஆனால் அதற்கு வந்த பதில், அவரை ஆச்சரியப்படுத்தியதாகவே சொல்லலாம். எந்த தயக்கமும் இன்றி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த மாணவியுடன் நேரடியாக பேசி, தேவையான தொகை கல்லூரிக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரவு நேரத்திலும் அந்த உதவி முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும், பணம் செலுத்திய விவரத்தை தானே அழைத்து தெரிவிக்கப்பட்டதாகவும் சரவணன் கூறுகிறார்.

அடுத்த நாள், காலேஜ் பீஸ் கட்டிய செய்தியுடன் அந்த மாணவி அனுப்பிய நன்றிச் செய்தி, இந்த உதவியின் உண்மையான மதிப்பை உணர வைத்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகே, சிவகார்த்திகேயனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக சரவணன் சொல்கிறார். பிறகு சிவகார்த்திகேயனை சந்தித்த போது, "அண்ணே" என்று அழைத்து, அன்புடன் கைகளைப் பிடித்துக் கொண்ட சிவகார்த்திகேயனின் செயலில், ஒரு குடும்பத்தின் நன்றியும் நம்பிக்கையும் வெளிப்பட்டதாக அவர் உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

Sivakarthikeyan Parasakthi

இது பெரிய தொகை உதவி அல்ல. ஆனால், ஒரு படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நாள்... மிக முக்கியமான நேரத்தில், ஒருவரின் கல்வி குறித்த கவலையை தன்னுடைய கவலையாக எடுத்துக் கொண்டு உடனடியாக உதவ முன்வந்த மனப்பான்மையே, சிவகார்த்திகேயனை தனித்துவமாக காட்டுகிறது. இதை கோடி ரூபாய்க்கு இணையான மனிதநேய செயலாகவே பார்க்கலாம் என திரையுலக வட்டாரங்களிலும் கருத்துகள் எழுந்துள்ளன.

திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உண்மையான நாயகனாக நடந்து கொள்ளும் சிவகார்த்திகேயனின் இந்த செயல், அவருக்கு கிடைக்கும் ரசிகர் ஆதரவும் மரியாதையும் ஏன் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பதற்கான இன்னொரு சாட்சியாகவே பார்க்கப்படுகிறது. 'பராசக்தி' படம் குறித்து பேசப்படும் அதே நேரத்தில், இப்படிப்பட்ட செயல்களால் சிவகார்த்திகேயன் பலரின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+