தியேட்டர் வாசலில் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து அழுத நடிகர்! ராதிகா உருக்கம்.. டிடி -யின் எதிர்பாராத செயல்
சென்னை: நடிகராக தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan Thai Kizhavi), தயாரிப்பாளராகவும் தரமான படைப்புகளை வழங்கி வருகிறார். அந்த வரிசையில் அவர் தயாரித்துள்ள புதிய படம் தாய் கிழவி. சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த படம் அவரின் முதல் படமாகும். ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், பால சரவணன், ரேச்சல், முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் நாளை வெளியாக இருக்கிறது.

தாய் கிழவி பிரீமியர் ஷோ
படம் வெளியாகும் முன்பாக நேற்று திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சூர்யா, ஜோதிகா, ஷாலினி, பிரபு, ராதா, சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர். காட்சி முடிந்ததும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு படக்குழுவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ராதிகாவின் நடிப்பு குறித்து அனைவரும் ஒரே குரலில் பாராட்டி, அவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெகிழ வைத்த காட்சி
இந்தப் பிரீமியர் காட்சிக்குப் பிறகு நடந்த சில உணர்ச்சி பூர்வமான தருணங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் பால சரவணன், சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுதார். பின்னர் இயக்குநர் சிவக்குமார் முருகேசனையும் அணைத்து வாழ்த்தினார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளன.
ராதிகா செய்த செயல்
அதேபோல் ராதிகாவும் வெளியே வந்தவுடன் கண் கலங்கியபடி "சிவகார்த்திகேயன் எங்கே?" என்று கேட்டு அவரை நேரில் பார்த்து நன்றி தெரிவித்ததார். படத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும், கிடைத்த வரவேற்பும் அந்த தருணத்தில் வெளிப்பட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாராட்டிய டிடி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி (திவ்யதர்ஷினி) சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து வாழ்த்திய காட்சியும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த காலத்தில் போட்டியாளராக வந்த சிவகார்த்திகேயன் இன்று நடிகர், தயாரிப்பாளர் என உயர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்ட டிடி, "என் முன்னாடியே வளர்ந்த தம்பி" என்று பெருமையுடன் பாராட்டி இருந்தார். அந்த நெருக்கமான தருணம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், ராதிகா மற்றும் ஷாலினி இணைந்து சிவகார்த்திகேயனை கலாய்த்த வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது. ஷாலினியிடம் "சிவாவை தெரியும்ல?" என்று ராதிகா கேட்க, "தெரியாதே" என்று ஷாலினி சொன்னதும், "அப்படியே தெரியாமலேயே இருங்க" என்று ராதிகா பதில் சொன்ன காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முன்னதாக இந்தப் படம் கமல்ஹாசனுக்காகவும் திரையிடப்பட்டிருந்தது. "இந்தப் படத்தை பற்றி நான் சொல்வதைவிட மக்கள் சொல்வார்கள்... சிறப்பான படம், சிறப்பான இயக்குநர்" என்று அவர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ரீமியர் காட்சியிலேயே இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதால், பொதுமக்கள் மத்தியில் படம் எப்படி ஓடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எமோஷனல், நடிப்பு, இயக்கம் என பல அம்சங்களால் பேசப்படும் தாய் கிழவி நாளைய வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications