₹3000 சொத்துக்கு அதிபதி சிவ ராஜ்குமார்! எளிமையான சிவண்ணா.. மகன்களிடம் அப்பா நடிகர் வாங்கிய சத்தியம்!
சென்னை: புற்றுநோய் அறுவை சிகிச்சை முடிந்து, கண் விழித்த சிவ ராஜ்குமார், தனது மனைவியிடம், "உன்னை மீண்டும் பார்ப்பேன் என்று நம்பவே இல்லை" என்று சொல்லி கண்கலங்கியிருக்கிறார்.. சிவராஜ்குமார் போன்ற குணம் திரையுலகில் இருப்பது அரிதான விஷயம் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பாலாஜி பிரபு, "சிவ ராஜ்குமார் மீது தமிழ் மக்களுக்கு அதிக பிரியம் உள்ளது.. காரணம், சிவராஜ்குமார் பிறந்ததே சென்னை மயிலாப்பூரில் உள்ள கல்யாணி மருத்துவமனையில்தான்..

சென்னையுடன் தொடர்பு
ஸ்கூல் படிப்பை பெங்களூரில் முடித்தாலும், காலேஜ் படிச்சதெல்லாம் ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜில்தான்.. அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயிற்சியை முடித்தார்.. ஏதோ ஒருவகையில் தமிழ்நாட்டுடன் அவர் தொடர்பிலேயே இருந்தார்..
அதுமட்டுமல்ல, அவரது அப்பா ராஜ்குமாரின் வீடு கோடம்பாக்கத்தில் இருந்தது.. இங்கிருந்துதான் பல வருடமாக பெங்களூருக்கு ஷூட்டிங் சென்று வந்தார் ராஜ்குமார். அப்போதெல்லாம்கூட சிவராஜ்குமார் சென்னையில்தான் இருந்தார். அதனால்தான் பிறப்பால் கன்னடமாக இருந்தாலும் சிவராஜ்குமாரை "தமிழ் மகன்" என்றே நம் மக்கள் நினைக்கிறார்கள்..
அப்படியிருந்தும்கூட, தமிழில் எந்தபடமும் நடிக்கவில்லை.. அவர் நடித்த முதல் படமே ஜெயிலர் தான்.. வேட்டி, சட்டை, நடை, டிஷ்யூ பேப்பரை தட்டிவிடுவது போன்ற சீன்களை பார்த்து தமிழக ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்..
கடைசி நிமிடத்திலும் உதவி
தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் யாரும் என்னை நடிக்க கூப்பிடவில்லை என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்திருந்தார் சிவராஜ்குமார். ஜெயிலர் 2-ல் நடிக்கும்போதுதான், உடல்நல பாதிப்புக்கு ஆளானார்.
இயக்குநர் ரவி அரசு, சிவ ராஜ்குமாருக்காக கதையுடன் ஒன்றரை வருடங்கள் காத்திருந்தார்.. அப்போது சிவராஜ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ரவி அரசுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காக, நடிகர் தனுஷிற்கு போன் செய்து இந்த கதையை நடிக்க சிபாரிசு செய்திருக்கிறார்.. அதாவது தன்னுடைய உடல்நிலை மோசமான நிலையிலும் மற்றவர் நலனை அவர் நினைத்து பார்த்தது அவரது பெருந்தன்மையான விஷயம்.
இவரது அப்பா ராஜ்குமார், குடும்பத்தினர் யாரும் அரசியலுக்குப் போகக்கூடாது எனச் சத்தியம் வாங்கியுள்ளார்... அதை இன்றுவரை குடும்பத்தினர் கடைப்பிடிக்கிறார்கள்..
அப்பா வாங்கிய சத்தியம்
2 நாட்களுக்கு முன்பு சிவராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை, அரசியலில் இல்லாமலும் பல உதவிகளைச் செய்ய முடியும்" என்று உறுதியாக சொன்னதன் காரணமும் தன் அப்பாவுக்கு செய்து தந்த சத்தியம்தான்.
ராஜ்குமாரை போலவே, அவரது 3 மகன்களுமே எளிமையை கடைப்பிடிக்கின்றனர்.. புனித் ராஜ்குமார் எத்தனையோ ஏழை குழந்தைகளுக்கு வருடா வருடம் படிப்பு, இலவச கல்வி தந்துள்ளார்.. இலவச மருத்துவமனை கட்டி தந்துள்ளார்..
ரூ.3000 கோடி சொத்து
இறப்பதற்கு முன்பு புனித் ஒரு பேட்டியில், என் அப்பா சேர்த்து வைத்த சொத்து, உழைப்பில் வந்த சொத்துக்கள் சுமார் 2,000 முதல் 3,000 கோடி ரூபாய் வரை உள்ளது.. அதனால் நான் சம்பாதித்த பணத்தில் என் தேவைக்கு போக, மக்களுக்கு தர நினைக்கிறேன், இந்த மக்கள்தான் இந்த உயரத்தை என் அப்பாவுக்கு தந்தார்கள், எனக்கு தந்துள்ளார்கள்.. அதனால்தான் மக்களுக்காக செய்கிறேன்" என்றார்.
அவ்வளவு பெரிய செல்வாக்கும் பணமும் இருந்தும், ராஜ்குமார் மகன்கள் அதை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை..
கமலுக்காக ஓடி வந்த பாசம்
சிவ ராஜ்குமாரும் அப்படித்தான்.. பல பேருக்கு உதவிகளை செய்து வருகிறார்.. அதனால்தான் சிவண்ணே என்று பாசத்துடன் அழைக்கிறார்கள்..
தக் லைஃப் சமயத்தில் கமலுக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, கமலுக்காக சப்போர்ட் செய்து நின்றார்...தமிழ் நடிகர்களே கமலுக்காக சப்போர்ட் செய்ய தயங்கும்போது, கன்னடத்தில் அத்தனை எதிர்ப்புகள் உள்ளபோதும், கமல்ஹாசனுக்காக குரல் கொடுத்த நல்லவர்.. அவரது குணம் அப்படிப்பட்டது" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications