புன்னகை நடிகையை காதலித்த அரசியல்வாதி.. சினேகாவை வலம் வந்த ரூமர்ஸ்! ரசிகர்களை ஈர்த்த ஹோம்லி ஹீரோயின்
சென்னை: "புன்னகை இளவரசி" எனப்படும் நடிகை சினேகா, கிளாமர் கேரக்டர்களை செய்யாமல், பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்ததால் அவர்மீது நல்ல இமேஜ் பலருக்கும் பரவியது.. சினேகா எந்த இடத்திலும் தன்னை ஒரு கவர்ச்சி பிம்பமாக காட்டிக்கொள்ளவில்லை. அவர் பானுப்பிரியா, நதியா போன்ற ஒரு 'ஹோம்லி' நடிகையாகவே பார்க்கப்பட்டார்" என்று புகழ்ந்து பேசியிருக்கிறார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
உங்கள் நிலம் என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "சினேகாவுக்கும் கேஆர் விஜயாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. ஆனால், சினேகாவுக்கு களையான முகமாகவும், சிரிக்கும்போது பளிச்சென இருக்கும்..

சினேகாவின் சிரிப்பு மற்றும் அழகான முகபாவனைகளுக்காகவே "புன்னகை அரசி" என்று அவரை ரசிகர்கள் அழைக்கிறார்கள்.. சினேகா சவுதியில் பிறந்து வளர்ந்தவர்.. 'விரும்புகிறேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..
ஸ்ரீகாந்த்துடன் காதல்
எல்லாரும் விரும்பும்படியான கேரக்டர் முதல் படத்திலேயே சினேகாவுக்கு அமைந்தது.. இதற்கு பிறகு வரிசையாக பல படங்கள் அமைந்தன.. "பார்த்திபன் கனவு" போன்ற குடும்பப்பாங்கான படங்களில் நடித்ததன் மூலம் சினேகாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது..
பார்த்திபன் கனவு, உள்ளிட்ட 4 படங்களில் நடிகர் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து சினேகா நடித்தார்.. அப்போது இவர்கள் 2 இருவரும் காதலிப்பதாகவும், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.. ஆனால், ஸ்ரீகாந்த் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர், சினேகா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், திருமணத்தில் முடியாமல் வெறும் பேச்சோடு முடிந்துவிட்டது.
அரசியல்வாதி மகன்
ஆனாலும், சினேகா மீது பல ஹீரோக்களுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது.. எப்படியாவது சினேகாவுடன் நடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.. ராகவா லாரன்ஸ் மற்றும் வெங்கட் பிரபு போன்றோரெல்லாம் சினேகாவின் தீவிர ரசிகர்களாக இருந்தனர்..
அதேபோல கிசுகிசுக்கள் நிறைய சினேகாவை சுற்றி வலம்வந்தன.. ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன், பெரிய தொழிலதிபர் போன்றோருடன் சினேகாவை இணைத்து கிசுகிசுக்கள் அந்த நேரத்தில் வலம் வந்தன.. அதெல்லாம் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை..
நடிகைக்கு பரிசு பொருட்கள்
கிளாமர் கேரக்டர்களை செய்யாமல், பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டர்களையே சினேகா தேர்ந்தெடுத்து நடித்ததால் அவர்மீது நல்ல இமேஜ் பலருக்கும் பரவியது.. சினேகா எந்த இடத்திலும் தன்னை ஒரு கவர்ச்சி பிம்பமாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவர் பானுப்பிரியா, நதியா போன்ற ஒரு 'ஹோம்லி' நடிகையாகவே பார்க்கப்பட்டார்.
அதனால்தான் சினேகாவுக்கு பிறந்த நாள் என்றால், சில டைரக்டர்கள் இன்ப அதிர்ச்சியான பரிசு பொருட்களை மரியாதை, அன்பு காரணமாக தருவதுண்டு..
நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்... பிரசன்னாவுக்காகவே சைவம் சமைக்க கற்றுக் கொண்டாராம் சினேகா..
கை நிறைய சம்பளம், வருமானம்
சினேகாவின் கணவராக உள்ளதால் இப்போதும் படங்களில் பிரசன்னா நடித்து வருகிறார்.. கணவருடன் இணைந்து பல விளம்பரங்களில் சினேகா நடித்து, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்குக் கிடைக்கும் மரியாதையைப் போல, சினேகாவின் கணவர் என்ற அடையாளத்தால் பிரசன்னாவிற்கும் பல விளம்பர வாய்ப்புகளும் மதிப்பும் கிடைத்து வருகிறது.
பல விளம்பரங்களில் நடிப்பதற்கு இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ஈசியாக சம்பாதிக்கிறார்கள்.. இதைத்தவிர, தெலுங்கு படங்களில் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் சினேகா நடித்து வருகிறார்.. காரணம், ஹீரோக்கள் எடுக்கும் முடிவுகளே சினிமாவில் ஹீரோயின்களின் வாய்ப்புகளை தீர்மானிக்கின்றன..
சில ஹீரோக்களின் தவறுகள்
சினிமாவில் ஒரு படத்திற்கு எந்த கதாநாயகி வேண்டும் என்பதை அந்தப் படத்தின் ஹீரோக்களே தீர்மானிக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு ஹீரோயினைப் பிடிக்கவில்லை என்றால் அவரை மாற்றச் சொல்லும் அதிகாரம் ஹீரோக்களிடமும், பிரபல காமெடி நடிகர்களிடமும் இருக்கிறது.
இப்படி சில நேரங்களில் ஹீரோக்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது ஒரு நடிகையைப் பிடித்திருந்தாலோ அவர்களை புக் செய்ய சொல்கிறார்கள். ஆனால் அந்த படம் தோல்வியடைந்த பிறகுதான் அவர்கள் தங்கள் தவறை உணர்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்..!!












Click it and Unblock the Notifications