பைக் டாக்ஸி ஓட்டுறாரா வி.சேகர் மகன்? லாஸ்ட் வரை நிறைவேறாத அப்பாவின் ஆசை! இறுதி நேரத்தில் என்னாச்சு
சென்னை: வி சேகரை பொறுத்தவரை, காமெடியனே ஹீரோவாக்கி படம் எடுத்துவிடுவார். குடும்ப படங்களாக இருந்தாலும் சமூக கருத்துக்களும், காமெடிகளும் நிறைய இருக்கும்.. கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். திராவிட சித்தாந்தங்களை பேசுபவர்.. சமத்துவம் என்ற ஒன்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தவர்" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மறைந்த இயக்குநர் வி.சேகர் பற்றி கூறியிருக்கிறார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, வி.சேகரின் அனைத்து படங்களுமே ஹிட்.. தன்னுடைய படங்களில் கவுண்டமணி, செந்தில் தொடர்ந்து இடம்பெற்றார்கள்.. ஆரம்ப கால வடிவேலு, விவேக்குக்கு வாய்ப்புகளை தந்தவர். அதிக காமெடி நடிகர்களை வைத்து படம் எடுத்தவர்..

சமூக கருத்துக்கள்
வி சேகரை பொறுத்தவரை, காமெடியனே ஹீரோவாக்கி படம் எடுத்துவிடுவார். குடும்ப படங்களாக இருந்தாலும் சமூக கருத்துக்களும், காமெடிகளும் நிறைய இருக்கும்.. கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். திராவிட சித்தாந்தங்களை பேசுபவர்.. சமத்துவம் என்ற ஒன்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தவர்..
வி.சேகர் படம் ரிலீஸ் என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று பார்க்க மக்கள் தயாராகி விடுவார்கள்.. ஆனால், கடைசி காலகட்டங்களில் வி.சேகருக்கு சில வருத்தங்கள் இருந்தன.
கவுண்டமணி, செந்தில்
வடிவேலுவின் ஆரம்ப கால கட்டத்தில் பல படங்களில் வி.சேகர் நடிக்க வைத்தார்.. ஆனால், வடிவேலுவை படங்களில் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி கவுண்டமணி நடிக்க மறுத்துள்ளார். எனினும் கவுண்டமணியை சமாதானம் செய்து, அதற்கு பிறகே வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் வி.சேகர். இன்னும் சொல்லப்போனால் கவுண்டமணிக்கு சமமான கேரக்டரையே தந்திருந்தார்..
அந்தவகையில் இன்று வடிவேலு இன்று உச்சத்தில் இருக்க காரணமே வி.சேகரின் பங்களிப்பும் முக்கியம். ஆனால், இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தும், வடிவேலு உதவவில்லை என்ற வருத்தம் வி.சேகருக்கு இருந்துள்ளது.
தான் வறுமையிலும், கஷ்டத்திலும் இருக்கும்போது, கால்ஷீட் தந்தோ அல்லது வேறு எந்தவகையிலும் உதவவில்லை என்ற கடைசி காலத்தில் இருந்துள்ளது. இதை வி.சேகருக்கு நெருங்கிய நண்பர்களே பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
வடிவேலுவால் வருத்தம்
ஒருவேளை விவேக் உயிருடன் இருந்திருந்தால், இப்படியொரு கஷ்டமான சூழ்நிலை வந்திருக்காது, விவேக் தாராள குணம் படைத்தவர், வள்ளல் குணம் கொண்டவர்இ என்னை இந்த அளவுக்கு கஷ்டப்பட விட்டிருக்க மாட்டார் என்றெல்லாம் வி.சேகரும் பல பேட்டிகளில் சொல்லி உள்ளார்.
வி.சேகர் இந்த அளவுக்கு வறுமைக்கு ஆளாக காரணம், சரத்குமாரை வைத்து ஏய் என்ற படத்தை எடுத்திருந்தார்.. திருவள்ளூவர் கலைக்கூடம் சார்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தை ஏ.வெங்கடேசன் டைரக்ட் செய்திருந்தார்.. அதேபோல ஸ்ரீகாந்த் சதுரங்கம் என்ற படத்தை எடுத்திருந்தார். இந்த படங்கள் தோல்வியை அடைந்தன..
அதேபோல தன்னுடைய மகன் காரல் மார்க்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்தி சரவண பொய்கை படம் எடுத்தார்.. அந்த படம் ரிலீஸே ஆகவில்லை.. இதெல்லாம் சேர்ந்து வி.சேகரை நிலைகுலைய வைத்துவிட்டது..அத்தனை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை தந்த வி.சேகரின் மகன், ரேபிட்டோ ஓட்டிட்டு இருக்கார்.. ரேபிடோ ஓட்டித்தான் அப்பாவுக்கு சோறு போட்டு வந்துள்ளார்.
அரசு பணியில் வி.சேகர்
வி.சேகர் போன்ற ஒரு படைப்பாளி கிடைக்க மாட்டார்கள்,.. சென்னை கார்ப்பரேஷனில் அரசு பணியில் இருந்த வி.சேகர், டைரக்டர் லெனின் மூலமாகத்தான் சினிமாவில் வந்துள்ளார்..
பாக்யராஜிடம் உதவியாளராக சேர்ந்து, பிறகு நீங்களும் ஹீரோதான் என்ற படத்தை முதல்முதலாக எடுத்தார்,. இது அன்றைய காலத்தில் சர்ச்சையை உருவாக்கின படமாகும். சினிமா ஹீரோக்கள் எவ்வளவு போலியானவர்கள் என்ற முகத்திரையை கிழித்து காட்டியிருந்தார்.. சினிமாவை சார்ந்தவர், சினிமாவை தோலுரித்து காட்டியது சரியா? என்று எதிர்ப்புகளும் வி.சேகருக்கு வந்தது. ஆனால் பொதுமக்கள் வி.சேகருக்கு பலமான ஆதரவை தந்தார்கள்.
கடைசி ஆசை நிறைவேறல
எந்த நோய் நொடியும் இல்லாமல் இருந்த வி.சேகருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. 10 நாட்களுக்கு முன்பு காபி குடித்துவிட்டு, குளிக்க சென்றவர் மயங்கி விழுந்துள்ளார்..
உடனே மருத்துவமனையில் அனுமதித்தும், மூளைச்சாவு அப்போதே அடைந்துள்ளர்.. 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தும், சிகிச்சை பலனளிக்கவில்லை.. ஆனால் கடைசிவரை தன்னுடைய மகனை ஹீரோவாக்க ஆசைப்பட்டும் அந்த ஆசை நடக்கவேயில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications