பிரபல தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி காலமானார்! சோகத்தில் நடிகர் ஜீவா- ஜித்தன் ரமேஷ்! திரையுலகம் இரங்கல்
சென்னை: பிரபல தயாரிப்பாளரும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவாவின் தந்தையுமான ஆர்பி செளத்ரி காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அருகே நடைபெற்ற வாகன விபத்தில் ஆர்பி செளத்ரி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர். பி. சௌத்ரி (R.B. Choudary) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த ஒரு முக்கிய தயாரிப்பாளர் ஆவார். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளரான இவர், பல வெற்றிகரமான படங்களை வழங்கியுள்ளார்.
1980களின் பிற்பகுதியில் திரைப்படத்துறையில் நுழைந்தார். மூன்று முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். இவரது மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா, இருவரும் நடிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் சென்ற ஆர்பி செளத்ரி அங்கு விபத்தில் சிக்கியதாக சொல்லப்படுகிறது இந்த விபத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்த ஆர்பி செளத்ரி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்பி செளத்ரி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்த முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர். அவரது மறைவு திரைத் துறைக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications