Jana Nayagan : ‘ஜன நாயகன்’ முன்பதிவிலேயே வசூல் வேட்டை தொடங்கியது! இதுவரை கலெக்ஷன் நிலவரம்!
சென்னை: (Jana Nayagan advance booking collection) விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அரசியல் அதிரடித் திரைப்படமான 'ஜன நாயகன்', இன்னும் வெளியீட்டுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில், முன்பதிவு மூலமே திரையரங்க வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, இப்படத்தின் மீது உருவான எதிர்பார்ப்பு தற்போது நேரடியாக வசூலாக மாறத் தொடங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ டிரெய்லர் கூட வெளியாகாத சூழலிலும், முதல் நாள் காட்சிகள் மற்றும் பிரீமியர் ஷோக்களின் முன்பதிவு உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்பதிவு மூலம் மட்டுமே இப்படம் உலகளவில் சுமார் ரூ.15 கோடி வசூலை எட்டியுள்ளது என்பது திரையுலக வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மார்க்கெட்டில் ஜன நாயகன்
விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முன்பதிவு மிகுந்த வேகத்தில் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் மட்டும் முன்பதிவு மூலமாக ரூ.11 முதல் 12 கோடி வரை வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, 'ஜன நாயகன்' படம் ஓப்பனிங் டே முதல் பெரிய வசூல் சாதனையை நோக்கி செல்லும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்திய சந்தையைப் பொறுத்தவரை, இதுவரை ரூ.3 கோடி அளவுக்கு முன்பதிவு வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் மட்டுமே முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், விஜய்யின் கோட்டையாக கருதப்படும் தமிழ்நாட்டில் முன்பதிவு தொடங்கும்போது வசூல் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
கடைசி திரைப்படம் என்ற எதிர்பார்ப்பு
விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதே 'ஜன நாயகன்' மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பின் மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படம், ரசிகர்களிடையே ஒரு தனி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரீமேக் சர்ச்சைக்கும் இயக்குநரின் பதில்
இந்நிலையில், இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்கு படமான 'பகவந்த் கேசரி'-யின் ரீமேக்கா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், இயக்குநர் ஹெச். வினோத், ரசிகர்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.
"இந்த படம் ரீமேக்கா இல்லையா என்ற கேள்விக்கு இப்போதே தெளிவான பதில் சொல்ல முடியாது. ஆனால் இது தளபதி விஜய்யின் படம். ஒரே ஒரு ஷோ பார்த்தால், உங்களுக்கே பதில் கிடைக்கும். டீசர், டிரெய்லர், பாடல்கள் வர வர அனைத்தும் தெளிவாகும்," என அவர் கூறியிருப்பது, படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

டிரெய்லர் இல்லாமலேயே, முன்பதிவில் சாதனை வசூலை பதிவு செய்து வரும் 'ஜன நாயகன்', வெளியீட்டுக்கு முன்பே ஒரு ஹிட் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. விஜய்யின் ரசிகர் பலம், அரசியல் பின்னணி கொண்ட கதைக்களம், மற்றும் 'கடைசி படம்' என்ற சென்டிமென்ட் - இந்த மூன்றும் இணைந்து, இப்படத்தை 2026-ன் மிகப்பெரிய ஓப்பனர்களில் ஒன்றாக மாற்றும் எனத் தெரிகிறது.
-
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications