Dhanush: உன் மூஞ்சிய பார்த்தா அப்படித்தான் தோணுதுனு சொன்னாங்க! காதல் தோல்வி! மனம் திறந்த தனுஷ்
சென்னை: தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் தனுஷ். வெறும் நடிப்புடன் நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல பரிமாணங்களில் கலக்கி வருகிறார். தனுஷ் தான் நடித்த படங்களில் பெரும்பாலும் ஏன் காதல் தோல்வி கேரக்டரில் மட்டுமே நடிக்கிறார் என்ற ரகசியத்தை அவரது இந்தி பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் உடைத்திருக்கிறார்.

சிறப்பான பயணம்
தனுஷ் நடிக்க வந்த புதிதிலேயே 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை' போன்ற படங்களில் நடித்துத் தன்னால் எவ்வளவு சிறப்பாக நடிக்க முடியும் எனக் காட்டினார். அதற்கு பிறகு, வணிக ரீதியான படங்களில் நடித்துத் தனக்கென ஒரு பெரிய சந்தை (மார்கெட்) உருவாக்கினார்.
வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்றப் படங்களில் நடித்தார். இதில், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதும் வாங்கினார். ஒருபக்கம், இயக்குநராகவும் கலக்கி வருகிறார். அவர் இயக்கி நடித்து வெளியான 'இட்லி கடை' படமும் ரசிகர்கள் மத்தியில் நன்றாகப் பேசப்பட்டது.
அடுத்த படங்கள்
தற்போது, 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் மமீதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இந்தி படங்களிலும் தனுஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். தனுஷை வைத்து அட்ராங்கி ரே, ராஞ்சிஹானா போன்றப் படங்களை இயக்கிய ஆனந்த் எல். ராய் இப்போது தனுஷை வைத்து மூன்றாவது முறையாக 'தேரே இஷ்க் மே' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற 28-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஒரே சந்தேகம்
தனுஷ் நடித்த படங்களில் அவரின் காதல் தோல்வி ஆவதுபோலவே கதை போகும். 'தேரே இஷ்க் மே' படத்திலும் அதுதான் கதை. இதே சந்தேகத்தை தனுஷ் இயக்குநர் ஆனந்த்திடம் கேட்டிருக்கிறார். அதாவது, "என்னை எப்போதும் ஏன் காதல் தோல்வி கதாபாத்திரங்களிலேயே நடிக்க வைக்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார்.
இயக்குநரின் பதில்
அதற்கு பதில் சொன்ன ஆனந்த், "உன் முகத்திலேயே ஒரு பிரேக்கப் மேன் ஃபீல் இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார். உடனே தனுஷ் வீட்டுக்கு போய் கண்ணாடி முன் நின்று பார்த்தேன். எந்த கோணத்திலும் அப்படி தெரியவில்லை எனக் குழப்பமாக இருந்தது என்று சுவாரசியமாக பேசியிருக்கிறார்.
இந்த பேச்சைக் கேட்டவுடன், ஆனந்த் சொன்னதை ஒரு பாராட்டுதலாக எடுத்துக் கொண்டேன் என்றும் தனுஷ் புன்னகையோடு கூறியிருக்கிறார். தனுஷ் மற்றும் ஆனந்த் எல். ராய் கூட்டணியின் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"விஜய் ஜெயிச்சிட்டாரு... அடுத்து?" - தனுஷை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்! கஸ்தூரி ராஜா பேச்சால் கிளம்பிய சர்ச்சை -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications