சேலம் ஜீவா.. அதுக்குள்ளேயே கசந்துபோன காதல்.. சொல்ல சொல்ல கேட்காத இன்ஸ்டா மோகம்.. அடக்கடவுளே
சேலம்: சேலம் இளம்பெண் ஜீவா எடுத்த முடிவு, பெரும் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் அய்யம் பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு.. 25 வயதாகிறது.. இவர் வெல்டிங் வேலையை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் ஜீவா. புதுச்சேரியை சேர்ந்தவர் ஜீவா.

காதல்: பெரும்பாலும் ஆன்லைனிலேயே பொழுதை கழிப்பதில் ஆர்வமுள்ளவர் ஜீவா.. அப்படித்தான் முகநூலில் ஜீவாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.. இருவரும் செல்போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டு அடிக்கடி பேசி வந்தனர்...
ஒருகட்டத்தில் இதுவே காதலாகவும் மலர்ந்தது.. அதற்கு பிறகு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்.. இப்போது இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது...
இன்ஸ்டாகிராம்: இப்படிப்பட்ட சூழலில், சந்துருவின் புத்தி மீண்டும் "ஆன்லைனிலேயே" தடுமாற துவங்கியது.. ஃபேஸ்புக்கைவிட, இன்ஸ்டாகிராமில் நிறைய நேரம் செலவிட்டு வந்ததுடன், பல பெண்களிடம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.. இந்த விஷயம் ஜீவாவுக்கு தெரிந்து, சந்துருவை கண்டித்திருக்கிறார். ஆனாலும், சந்துரு இன்ஸ்டாகிராம் பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஜீவாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில், இருவருக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது.. நாளுக்கு நாள் இந்த சண்டை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4-ந் தேதியும் கணவன், மனைவி இடையே தகராறு வந்துள்ளது.. எவ்வளவோ அட்வைஸ் செய்தும், கணவன் திருந்தாத நிலையில், விரக்தி அடைந்த ஜீவா வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை: இதையடுத்து, சூரமங்கலம் போலீசார் தகவலறிந்து விரைந்து வந்து, ஜீவாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications