பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் பிறந்த நாள் விழா
புதுச்சேரி: பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் பிறந்தநாளும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பேராசிரியர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா இன்று (05.09.2013) புதுச்சேரியில் கொண்டாடப்படுகின்றது.
மேலும் இந்திய அரசின் செம்மொழி இளம் அறிஞர் விருதுபெறும் முனைவர் ஆ.மணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகின்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை ஆறரை மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இந்த நிகழ்வு இடம் பெறுகிறது. இதில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து தலைமை தாங்குகிறார்.
பெரிய. பூபதி வரவேற்புரை நிகழ்த்துகிறார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார். புதுச்சேரி தாகூர் கல்லூரி முனைவர் ஆ.மணி சிறப்புரை நிகழத்துகிறார். பெருமழைப் புலவரின் உரைச் சிறப்புகள் என்ற பொருளில் உரை நிகழ்த்தப்படும்.
முனைவர் க. திருமலைவாசன் நன்றியுரை நவில்வார். நிகழ்ச்சி ஏற்பாட்டினைப் புதுச்சேரி இலக்கிய வட்டம் அமைப்பினர் செய்துள்ளனர்.
மேலும் தொடர்புக்கு: 0091 9442029053
செய்தி: முனைவர் மு. இளங்கோவன்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications