Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதயத்தோடு இணங்கி வாழ்வோம்

Subscribe to Oneindia Tamil
Heart

சுறுசுறுப்பாக இருங்கள். இதயத்தைப் பேணுங்கள். 30 நிமிட நேர உடற் பயிற்சிகள் மாரடைப்புகளையும் பக்கவாதத்தையும் தவிர்க்க உதவும். அது உங்களது வேலையிலும் அனுகூலமாக அமையும். படிக்கட்டு வரிசையைப் பயன்படுத்துங்கள். இடைவேளைகளில் உலாவுங்கள்.

உப்பைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். உங்களது உப்பு பாவனையை நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவுக்கு மட்டுப்படுத்துங்கள். பதப்படுத்திய' உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் உயர் உப்பு அடக்கத்தைக் கொண்டவை. குறிப்பாக தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் ரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உட்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத்துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள்.முடியுரு நாடி செயலிழப்பு, இதய நோய், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் ஒரு வருட காலத்துள் பாதியளவுக்குக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையை அடைந்துவிடும்.

ஆரோக்கியமான உடல் நிலையைப் பேணுங்கள். குறிப்பாக உப்பு உள்ளெடுப்பைக் குறைப்பதால் ஏற்படும் நிறை குறைதலானது குருதியமுக்கம் குறைவடைய வழி செய்யும். பக்கவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக்குக் காரணம் உயர் குருதி அமுக்கமாகும்.

உங்களது தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களது குருதி அமுக்கம், கொலஸ்ரோல் மட்டம், குளுக்கோசு மட்டம், இடுப்பு இடை விகிதம், உடல் திணிவுச் சுட்டி போன்றவற்றை அளக்கக்கூடிய மருத்துவ நிபுணர் ஒருவரை நாடுங்கள். உங்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து நிலையை அறிந்து கொள்வதால் உங்களது இதயச் சுகாதாரத்தை மேம்படுத்தத்தக்க குறிப்பான திட்டத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்ளலாம்.

சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப்புத் தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும். என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். இரத்தக் குழாய்கள் சுருங்கும்.

முன்பு இதய நோய், மாரடைப்பு போன்றன குணப்படுத்த முடியாத நோய்களாக கருதப்பட்டன. ஆனால் இதய அறுவைச் சிகிச்சை முறை இன்று விருத்தி கண்டுள்ளது. இதய அறுவைச் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே அறுவைச் சிகிச்சை செய்வது.

இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பதுதான் பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய - நுரையீரல் இயந்திரம் (HEART - LUNG MACHINE) செய்யும். இம் முறையில் வெளியிலிருந்து இரத்தம் செலுத்த வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதயத்தை நிறுத்தாமல் துடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது "பீட்டிங் ஹார்ட் சர்ஜரி' ஆகும்.

இச் சிகிச்சை முறையில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை. இரத்தம் வாங்கும் செலவும் மிச்சம். சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் முதியவர்களுக்கும் "பீட்டிங் ஹார்ட் சர்ஜரி'யில் ஆபத்து மிகவும் குறைவு. இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட முடியாது.

இத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து ஆயுளை நீடிக்க நவீன ESMR சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது அறுவை சிகிச்சை இல்லாமல், வலியின்றி, அதிக செலவு பிடிக்காத ஒரு புதிய நவீன சிகிச்சை முறையாகும். ESMR என்பதன் விரிவாக்கம், Extracorporeal Shock - wave Myocardial Revascularization என்பது ஆகும்.

இந்த நவீன சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட இதயத் தசையின் மீது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அதிர்வுகள் செலுத்தப்படும்போது பல புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி இரத்த ஓட்டம் சீராகிறது. தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்போருக்கு இந்த நவீன சிகிச்சை மூலம் முழு நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீர்பெற்று இதயம் நன்கு இயங்குகிறது. மருந்துகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி போன்றவை இதயக் கோளாறுக்கு உதவும் என்றாலும்கூட, ESMR போன்று முழுமையான தீர்வை அளிக்காது என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+