தேசியவாதிகளை குழப்பும் கார்போரேட்டுகள்
-சதுக்க பூதம்
ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டினரால் தொடங்கபடும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அதற்கு சலுகைகளை கொடுத்து அதன் முன்னேற்றத்திற்கும் போராடுவதுதான் பல காலமாக தேசியவாதிகளின் நோக்கமாக இருந்தது. உள் நாட்டு முதலீட்டாளர்களின் வளர்ச்சியால் உள்நாட்டு தொழில்துறை வளர்ந்து, நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் அதற்க்கான காரணமாக இருந்தது. இதில் பெருமளவு உண்மையும் இருந்தது. ஆனால் ஒரு சில உள்நாட்டு தொழிலதிபர்கள இதையே போட்டியை குறைக்க ஒரு ஆயுதமாக பயன்படுத்தி, தனக்கு கிடைக்கும் லாபங்களை அத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடாமல், தவறான வழிகளில் தங்களுடைய சொந்த லாபங்களுக்கு பயன்படுத்த தொடங்கினர்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின் வளர்ந்த நாடுகளின் முதலாளிகளால் உலகுக்கு திணிக்க பட்ட உலகமயமாதல் கொள்கை (globalization), உலக நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் களங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. வளரும் நாடுகள் மற்றுமின்றி வளர்ந்த நாடுகளிலும் இந்த மாற்றத்தின் தாக்கம் வெகுவாக இருக்கிறது. தேசியவாதிகளிடம் தற்போது ஏற்பட்டுள்ள மிக பெரிய குழப்பம், உண்மையிலேயே எந்த நிறுவனத்தை தங்களுடைய நாட்டின் நிறுவனம் என்று அழைப்பதுதான். இதில் எதற்கு குழப்பம், இது மிகவும் எளிதான விஷயம் தான் என்று நினைக்கிறார்களா?.
தற்போது நிறுவனங்களின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நீங்களும் பாருங்களேன். உலகமயமாக்காலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானது பொருளின் உற்பத்தியை எப்பாடுபட்டாவது மலிவாக உற்பத்தி செய்வதும், மூலதனங்கள் நாடுகளின் எல்லையை கடப்பது எளிதானதும் ஆகும்.
பொருளின் உற்பத்தியை மலிவாக்க நிறுவனங்கள் செய்யும் முயற்ச்சியால் ஏற்படும் பாதிப்பு பற்றி பார்ப்போம்.
ஒரு உற்பத்தி பொருளை சுதேசி பொருள் என்று எப்படி அழைப்பது?.அந்த பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம் துவங்கபட்ட நாடு சொந்த நாடாக இருந்தால் அதை சுதேசி பொருள் என்று அழைப்பதா?, அல்லது அந்த பொருளின் உற்பத்தி முழுவதும் அந்நாட்டு தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்து, அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் வியாபார பெருக்கம் செய்யும் வெளிநாட்டை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் தயாரித்த பொருளை சுதேசி பொருள் என்பதா?.
இந்தப் பிரச்சனை அமெரிக்க கார் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது பெருமளவு வெளியில் பேச தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக போர்டு நிறுவனங்களின் கார்களின் பெரும்பாலான பகுதிகள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யபட்டு, மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் இணைக்கபடுகின்றன. ஆனால் நிறுவனம் அமெரிக்காவைத் தலமையிடமாக கொண்டுள்ளது. ஒரு சில டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் 85% பகுதிகள் அமெரிக்காவில், அமெரிக்கர்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
போர்ட் நிறுவனத்தின் காரை சுதேசி தயாரிப்பு என்பதா? அல்லது டொயொட்டாவின் உள் நாட்டு தயாரிப்பு காரக்ளை சுதேசி கார் என்பதா? (ஏனென்றால் லாபத்தை தன் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது). இதை படிக்கும் உஙகளுக்கு இதன் விடை தெரிந்தால் அமெரிக்கர்களுக்கு கொஞ்சம் தெரியபடுத்துங்களேன்?.
அடுத்ததாக ஒரு சில நிறுவனங்களை சுதேசி நிறுவனம் என்று அரசு பல சலுகைகள் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அந்த நிறுவனம் பலம் வாய்ந்த பன்னாட்டு நிறுவங்களோடு போட்டி போட வேண்டும் என்பதால் அதற்கு பல சலுகைகளை இந்தியா போன்ற நாடுகளின் அரசுகளும் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்து ஊக்குவிக்கின்றன.
நிறுவனமும் நன்கு குறிப்பிடதக்க வளர்ச்சியை அடைந்த பின் அதை ஒரே நாளில் மற்றொரு பன்னாட்டு நிறுவனம் வாங்கிவிடுகிறது. அதுவரை அதன் வளர்ச்சிக்கு lobby செய்த தேசியவாதிகள் வாயடைத்து போகின்றனர். இதற்கு ரான்பாக்சி நிறுவனம் ஒரு நல்ல உதாரணம். மருந்து உற்பத்தி தொழிலில் (Pharmaceutical) இந்திய திறமைக்கு ஒரு எடுத்துகாட்டாக உலக அரங்கில் பேசப்பட்டது. அரசும் நேரடியான மற்றும் மறைமுக சலுகைகளை அளித்தது.
ஆனால் ஜப்பானை சேர்ந்த டெய்ச்சி நிறுவனம் அதை வாங்கிவிட்டது. தற்போது அது ஜப்பானிய நிறுவனமாகிட்டது.
உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடைக்கலமாவது மேற்கண்ட முறையில் மட்டும் இல்லை. சில ஆண்டுகளாக ஏற்பட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், உலகமயமாக்களாலும் பல நாடுகளும் (உதாரணமாக அரபு நாடுகள்), தனியாரும் தங்களிடம் உள்ள அளவிட முடியாத செல்வங்களை முறையான முதலீடு மூலமும் பிற வழிகளிளும் சிறிது சிறிதாக நல்ல எதிர்காலம் உள்ளதாக கருதப்படும் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இவை வளரும் நாடுகள் அன்றி வளர்ந்த நாடுகளில் உள்ள சிட்டி குரூப், UBS போன்ற நிறுவனக்களில் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போது நிறுவனங்களின் பங்குகளில் இவர்களது பங்கு பெரும் பங்கு இல்லை என்றாலும் முடிவுகளை கட்டுபடுத்தும் அளவுக்கு அதிகாரம் உள்ள நிலையை நோக்கி அவை நகர்ந்து வருகிறது.
நிறுவனம் உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்துவது (நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ) வெளிநாட்டினர் என்றால் அது உள்நாட்டு நிறுவனமா அல்லது வெளிநாட்டு நிறுவனமா என்ற வாக்குவாதம் கூட வர தொடங்கியுள்ளது.
தற்போதய நிதி நெருக்கடியால் நிறுவனங்கள் தங்களின் செலவை குறைக்க பல வேலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இந்த சூழலில் அது கடினம் என்றாலும் நிலமை சற்று சரியாக ஆரம்பித்தவுடன் அதன் வேகம் அதிகமாகும்.
பொருளாதார நெருக்கடி சரியாக தொடங்கியவுடன் பெட்ரோல் விலையும் மிக அதிகமாகி அரபு நாடுகளின் கைகளுக்கு அதிகளவு உபச்ரி செல்வம் செல்லவும் வாய்ப்புள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த கேள்வி எங்குமே ஒலிக்க தொடங்கலாம்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications