கரன்சியின் மதிப்பை குறைப்பதால் சீனாவுக்கு என்ன லாபம்?.
அதன் இறக்குமதிகள் குறையும். அதாவது சீனாவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்ய அதிகமான டாலர்கள் தேவைப்படும். இதனால் இறக்குமதிகள் தானாகவே குறையும். அதே நேரத்தில் சீனாவின் ஏற்றுமதிகள் அதிகரிக்கும். அதாவது, சீனாவின் ஏற்றுமதிகளுக்குக் கிடைக்கும் டாலரின் அளவு அதிகரிக்கும். இன்னும் எளிமையாக சொன்னால், மற்ற நாடுகளில் விற்பனைக்குச் செல்லும் சீன தயாரிப்புகளின் விலை குறையும்.
சீனாவின் கட்டுமானத் தொழில்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை விழுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே போல சீனாவின் உற்பத்தித் துறையிலும் பெரும் சரிவு. காரணம், பொருட்களை வாங்க மக்களிடம் காசு இல்லை. சமீபத்தில் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டில் ஒரு அதிர்ச்சியாக விஷயம் இருந்தது. அதன் ஹை எண்ட் கார்களான லேண்ட் ரோவர், ஜாகுவார் ஆகியவற்றின் விற்பனை சரிந்து, ரூ. 2,500 கோடி அளவுக்கு டாடா மோட்டர்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம். இந்த விற்பனை சரிவு பெருமளவில் நடந்தது சீனாவில் தான். ஆக, ஆட்டோமொபைல்ஸ் விற்பனையிலும் சீனாவில் பெரும் அடி ஏற்பட்டுள்ளது வெளியே தெரியவந்தது.

அதே போல உலகளவில் பெரும் சரக்குக் கப்பல்களுக்கு நடக்கும் அட்வான்ஸ் புக்கிங்கிலும் பெரும் ஓட்டை. கப்பல்களை புக் செய்ய ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அதில் 10 சதவீதம் அளவுக்கு அடி விழ, அந்தப் பிரச்சனைக்கும் சீனா தான் காரணம் என்பது தெரியவந்தது. ஆக, சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதியிலும் பெரும் சரிவு. ஆனால், இதையெல்லாம் முடிந்தவரை சீனா மறைத்த வந்தது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications