மேகதாது அணை.. தமிழகத்துக்கு குட்நியூஸ் கூறிய காவிரி மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர்.. கர்நாடகா ஷாக்
திருச்சி: கர்நாடகா அரசு காவிரிக்கு குறுக்காக மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருச்சி - தஞ்சை மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி நீர் மேலாண்மை ஆணயை தலைவர் எல்கே ஹல்தர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேகதாது அணை விவகாரம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. அதுபற்றி இனி விவாதிக்க மாட்டோம் என்று காவிரி நீர் மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்பார்வையில் கர்நாடகா நமக்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே தான் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எல்கே ஹல்தர் தமிழகத்துக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளார்.
ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் காவிரி நீர் வழிப்பாதையை ஆய்வு மேற்கொள்வார். அந்த வகையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எல்கே ஹல்தார் நேற்று மேட்டூர் அணையை பார்வையிட்டார்.
இதையடுத்து இன்று திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிட்டார். பிறகு இன்று மதியம் கல்லணையை பார்வையிட்டார். அதன்பிறகு காவிரி ஆறு விளக்க கூடத்தை பார்வையிட்டார். இந்த வேளையில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பிஆர் பாண்டியன் சார்பில் எல்கே ஹல்தாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அப்போது மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டக்கூடாது. அதற்கு அனுமதி வழங்க கூடாது என்று கோரிக்கையை வைத்தார். மேலும் கடலில் காவிரி நீர் தடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு நீங்கள் முன்மொழிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து எல்கே ஹல்தர் கூறியதாவது:
‛‛மேகதாதுவில் அணை தொடர்பாக எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தில் அதுபற்றி இனி விவாதிக்கப்படாது. ஏனென்றால் அந்த விவகாரம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஒன்று. காவிரி நீர் பங்கீடு என்பது உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் செயல்படும் விஷயம். எந்த மாநிலமும் தனிப்பட்ட முறையில் முடிவுகள் எடுக்க முடியாது'' என்றார். இது தமிழகத்துக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கர்நாடகாவுக்கு ஷாக்காக பார்க்கப்படுகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications