‛‛நீங்க தான் ரியல் ஹீரோ’’.. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய கிறிஸ்டியானோ ரொனால்டோ? வீடியோ உண்மையா
இஸ்ரேல்: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் காசாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசியதாக வீடியோ பரவி வரும் நிலையில் அது உண்மையா? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
பாலஸ்தீனம் என்பது மேற்கு கரை மற்றும் காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனையில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அடிக்கடி ஹமாசுக்கும், அண்டை நாடான இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

கடந்த 7 ம் தேதி திடீரென ஹமாஸ் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமபை்பை தீவிரவாதிகள் என இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் இது தீவிரவாத தாக்குதலாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதலில் அன்றைய தினம் மட்டும் மொத்தம் 1,400 இஸ்ரேலியர்கள் பலியாகினர். இதையடுத்து போர் தொடங்கி விட்டதாக கூறி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீது வான்வெளி தாக்குதலை தொடங்கினார். தற்போது 2வது வாரமாக போர் தொடர்ந்து வருகிறது. இருதரப்பையும் சேர்த்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
Ronaldo speaks on behalf of innocent childrens of Palestine & Gaza🤌❤️#French #Palestine #غزة_الآن #HamasTerrorist #Gazagenocide #EclipseSolar #GazzeUnderAttack #HamasTerrorist #IsraelPalestineConflict#fixed #attentat #KSIFury #PalestineLivesMatter pic.twitter.com/tRaxCLR0hw
— Sabina ali (@1Sabina000) October 15, 2023
தற்போது காசாவின் எல்லை பகுதியை இஸ்ரேல் படைகள் முற்றுகையிட்டுள்ளன. விரைவில் இஸ்ரேல் படையினர் காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளனர். இதற்கிடையே தான் பல இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல மேலை நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் களமிறங்கி உள்ளன.
இந்த போரில் இந்தியா என்பது இஸ்ரேல் மீது கடந்த 7 ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய இருதரப்பும் அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ‛‛நீங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். நான் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரராக இருக்கலாம். ஆனால் நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள். உங்களின் நம்பிக்கையை நீங்கள் இழக்க வேண்டும். நான் உங்களை நினைத்து கவலை கொள்கிறேன். மேலும் உங்களுடன் நானும் இருக்கிறேன். உலகமே உங்களுடன் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த வீடியோவை பாலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ளதாக கூறி பலரும் இணையதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். அதோடு ரொனால்டோ காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக இருப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே சிலர் இந்த வீடியோ குறித்து சந்தேகம் தெரிவித்தனர்.
அதாவது ரொனால்டோ பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தால் பாலஸ்தீனம், காசா, ஹமாஸ் என ஏதாவது ஒரு பெயரை அவர் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இந்த வீடியோவில் அவர் எதையும் கூறவில்லை. இதனால் இது பொய்யான வீடியோ என சிலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது தான் ரொனால்டோவில் பழைய வீடியோ ஒன்றை சிலர் தற்போது பரப்பி அவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசியிருப்பதாக கூறுவது தெரியவந்தது. அதாவது தற்போது பரவி வரும் வீடியோவை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளார். அதில் "சிரியா மோதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையான செய்தி'' என்ற தலைப்பில் அவர் சிரியா உள்நாட்டு போர் குறித்து பேசியது உறுதியானது.
மேலும் தற்போது வரை ரொனால்டோ இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல் குறித்து பேசி எந்த வீடியோவும் வெளியிடவில்லை என்பதும் தெரியவந்தது. இதன்மூலம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ரொனால்டோ பேசியுள்ளார் என பரவும் வீடியோ என்பது போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்
முடிவு
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2015ல் சிரியா உள்நாட்டு போர் குறித்து பேசிய வீடியோ தற்போது தவறாக பரப்பப்பட்டு வருகிறது
ரேட்டிங்
-
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications