இதுல கூடவா.. ஓடிசா ரயில் விபத்து களத்தில் ஆர்எஸ்எஸ்-ஆ? பழைய படத்தை வெளியிட்ட பாஜக மாநில செயலாளர்
சென்னை: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தால் நாடே சோகத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் விபத்து களத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உதவி வருவதாக 8 ஆண்டுகள் பழைய புகைப்படத்தை தமிழ்நாடு பாஜக நிர்வாகி வெளியிட்டு இருக்கிறார்.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மீட்புப் படையினருக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது அப்பகுதியை சேர்ந்த மக்கள்தான். அதே நேரம் பல்வேறு ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்பினரும் களத்தில் இறங்கி உதவி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா நேற்று ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில். "ஒடிசா பாலாசோர் இரயில் விபத்து களத்தில் RSS ஸ்வயம்சேவகர்கள். அப்பகுதி RSS மாவட்ட இணை அமைப்பாளர் திரு.விஷ்ணு தலைமையில் 25 ஸ்வயம்சேவகர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரமண்டல் இரயிலில் பயணித்தவர்கள் உறவினர் அவசர தகவலுக்கு
திரு.விஷ்ணுவை அனுகவும் - 94398 61204. Also, Railway Emergency Control Room Number of Balasore - 06782262286 !" என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தை ப்கிர்ந்து உள்ளார். அதில் பலர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதைபோல் காட்சி இடம்பெற்று இருக்கிறது.
நேற்று இரவு 11.02 மணியளவில் எஸ்ஜி சூர்யா இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து உண்மையை அறிய முயன்றோம். விபத்து நடந்த நேரமே இரவு 7.30 முதல் 8.00 மணிக்கு இருக்கும் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க எஸ்ஜி சூர்யா பகிர்ந்த புகைப்படம் பகலில் எடுக்கப்பட்டதாக உள்ளது. இரவு நடந்த விபத்து குறித்து அந்த நாள் இரவே ட்விட்டர் பதிவிடும்போது எப்படி பகலில் எடுத்த புகைப்படத்தை வெளியிட முடியும்? என்ற சந்தேகம் எழுந்தது.
அதே புகைப்படத்தை கரூர் பாஜக மத்திய மாவட்ட தலைவர் கார்த்திகேயனும் இதே தகவலை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். இந்த நிலையில்தான் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மையை அறிய கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடினோம். அப்போதுதான் ட்விட்டரில் Friends of RSS என்ற பக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இதே புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.
அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் ஆனேக்கலில் ஏற்பட்ட ரயில் விபத்து என்று குறிப்பிட்டு இதே புகைப்படத்தை ஸ்ரீஹர்சா பெர்லா என்பவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த ரயில் விபத்து தொடர்பாக டான் என்ற செய்தி தளத்திலும் எஸ்ஜி சூர்யா, நேற்று வெளியிட்ட படமே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதே நேரம் மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒடிசாவுக்கு உதவி செய்வதற்காக விரைந்து உள்ளனர் என்று குறிப்பிட்டு ஒரு எண்ணை அறிவித்து இருந்தார். அந்த தகவலையே எஸ்ஜி சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர் என பாஜகவின் எஸ்ஜி சூர்யா ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவு
முடிவு
ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆர்.எஸ்.எஸ். களப்பணியாற்றுவதாக எஸ்ஜி சூர்யா வெளியிட்டது பழைய படம்
ரேட்டிங்
-
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications