
போட்றா வெடியை! ஆசை ஆசையாக போஸ்ட் போட்ட பாஜக சவுதா மணி.. கடைசியில் பார்த்தா "பொய்" .. வெடித்த சர்ச்சை
சென்னை: பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதா மணி இணையத்தில் பரப்பிய பொய்யான செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. ஒருவாரம் ஆகியும் நெட்டிசன்கள் பலர் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் குடியேறுவதற்கு என்று கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு சில நாடுகளில் இருந்து செல்வதே மிகவும் கடினமான விஷயம்.
இதற்காகவே அமெரிக்க குடியுரிமை சட்டத்தை அந்நாட்டு அரசு 1952ல் நிறைவேற்றியது. இதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.
இதில் பல சட்ட திருத்தங்கள் சமீப நாட்களில் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்தியா போறீங்களா? கவனமாக இருங்க.. சொந்த நாட்டு மக்களை சட்டென எச்சரித்த அமெரிக்கா.. பரபர பின்னணி

குடியுரிமை சட்டம்
அமெரிக்காவின் சட்டப்படி கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சிகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற முடியாது. ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் உள்ளன. உதாரணமாக நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் நினைத்தால் அமெரிக்காவில் குடியேற முடியும். அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு சென்று வர முடியும். இதற்கு தடை எதுவும் கிடையாது.

கம்யூனிஸ்ட்
கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் சிலருக்கு இதில் விலக்கு உள்ளது. தகுதி அடிப்படையில் கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார உறுப்பினராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற முடியும். முக்கியமாக இந்தியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. இந்தியாவில் சிபிஎம், சிபிஐ கட்சிகளில் இருந்தாலும் கூட அமெரிக்காவில் குடியேற முடியும். இந்த நிலையில்தான் இந்த சட்டம் பற்றி தவறான தகவலை பாஜக சௌதா மணி பரப்பி வருகிறார்.

பொய்யான செய்தி
அதன்படி எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டு உள்ளதாக சௌதா மணி பொய்யான செய்தியை பரப்பி உள்ளார். இது தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்றின் கார்டையும் அவர் பகிர்ந்து உள்ளார். இதை பகிர்ந்து போட்றா வெடியை என்று போஸ்ட் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவர் செய்த இந்த போஸ்ட் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

பாஜக
பாஜகவினர் பலர் இந்த போஸ்டை ஷேர் செய்து வருகின்றனர். இதை பகிர்ந்து கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு அமெரிக்காவில் தடை, இனி நீங்கள் அமெரிக்காவே செல்ல முடியாது என்று பாஜகவினர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் பரப்பும் இந்த செய்தி பொய்யானது ஆகும். அமெரிக்காவில் குடியேற எல்லா கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தடை விதிக்கப்படவில்லை, ஒரு சில நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தடை என்பதே உண்மை. ஒருவாரம் ஆகியும் நெட்டிசன்கள் பலர் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
எந்த நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்பட்டு உள்ளதாக சௌதா மணி பொய்யான செய்தியை பரப்பி உள்ளார்.
முடிவு
அமெரிக்காவில் குடியேற எல்லா கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தடை விதிக்கப்படவில்லை, ஒரு சில நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தடை என்பதே உண்மை.