இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது எந்த நேரத்தில் தாக்குதல் ஆரம்பித்ததோ,அப்போது முதலே இந்தியாவிற்கு நேரடியாக பல்வேறு சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக சிலிண்டர் பிரச்சனை எல்லாம் இரண்டு மாதம் கடந்தும் சரியாகவில்லை.. வீட்டு சிலிண்டர் கிடைப்பதும் பழைய நிலையை அடையவில்லை. பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும் நெருக்கடி உள்ளது. இந்த சூழலில் மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்ததாக தகவல்கள் பரவுகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல்-டீசல் சப்ளை, சமையல் கியாஸ் வினியோகத்திலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.. இதனால் விலைவாசி உயர்வு ஏற்படபொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் மேற்காசியாவில் போர் நடக்கும்போது, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிரடியாக உயரும். சிமெண்ட், கம்பி மற்றும் இதர கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கான டீசல் விலை கூடும்போது, கட்டுமானச் செலவும் கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. இதனால், "இவ்வளவு செலவு செய்து இப்போது எதற்கு கட்ட வேண்டும், நிறுத்தி வைக்கலாம்" என்ற தகவல்கள் பரவ தொடங்கி உள்ளது.
இந்த சூழலில், கட்டுமான செலவு அதிகரித்திருப்பதால் டெல்லியில் உள்ள மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சக அலுவலகங்களை கொண்ட நிர்மன் பவன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சக அலுவலகங்களை உள்ளடக்கிய உத்யோக் பவன், மத்திய கல்வி மற்றும் சட்ட அமைச்சக அலுவலகங்களை கொண்ட சாஸ்திரி பவன் கட்டிடங்களின் கட்டுமான பணிகள் உட்பட முக்கியமான எந்தவித கட்டுமான பணிகளையும் இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு செய்யவேண்டாம் என்று நிதி ஆயோக் அறிவுறுத்தியிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது.
விளக்கம்
இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் கூறியதாக பரவும் தகவல் தவறானது. நிதி ஆயோக் இதுபோன்ற பரிந்துரைகள் எதுவும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வதந்தி எப்படி பரவியது
கட்டுமானத்திற்குத் தேவையான சில மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படுவதால், மத்திய அரசு தனது பட்ஜெட்டை மிச்சப்படுத்தப் போகிறது என்ற ஒரு தவறான புரிதல் மக்களிடையே உருவானது. குறிப்பாக, டெல்லியில் உள்ள நிர்மன் பவன், உத்யோக் பவன் போன்ற முக்கிய அரசு கட்டிடங்களின் புனரமைப்புப் பணிகள் தள்ளிப்போகலாம் என்ற ஊகமே, "இந்தியா முழுமைக்கும் தடை" எனத் திரிக்கப்பட காரணமாக பார்க்கப்படுகிறது.
எந்தவொரு வதந்தியும் ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பின் பெயரைச் சொன்னால்தான் நம்பத்தகுந்ததாக இருப்பதும் ஒரு காரணம் ஆகும். இதில் நிதி ஆயோக் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். "பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது" என்று ஒரு போலிச் செய்தியை யாரோ சமூக வலைதளங்களில் கிளப்பிவிட, அது காட்டுத்தீயாகப் பரவி இருக்கிறது.
மக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வால் அச்சத்தில் இருக்கும்போது, இது போன்ற செய்திகள் வந்தவுடன் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் மற்றவர்களுக்குப் பகிரத் தொடங்குகின்றனர். இது போன்ற 'பார்வேர்டு' செய்திகள்தான் வதந்திக்கு உயிர் கொடுத்து மக்களை பீதிக்குள்ளாக்குகின்றன.
இதையடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்.. மத்திய அரசு அல்லது நிதி ஆயோக் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு போலிச் செய்தி என்று விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு கட்டுமான பணி மேற்கொள்ளவேண்டாம் என நிதி ஆயோக் பரிந்துரை செய்ததாக தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுகிறது
முடிவு
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்.. மத்திய அரசு அல்லது நிதி ஆயோக் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு போலிச் செய்தி என்று விளக்க
ரேட்டிங்
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications