Fact Check: குரங்குக் கடியால் 'குரங்கு மனிதராக' உருமாறிய நபர்- பரவும் வீடியோ- உண்மைதான் என்ன?
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்ததால் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென மருத்துவமனை கதவுகளில் குரங்கு போல் ஏறி நின்று கத்திக் கொண்டு தாவி வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. தம்மை பிடிக்க வருபவர்களையும் குரங்கு போல அந்த நபர் தாக்கி வருவதாகவும் பகிரப்படும் வீடியோக்களின் உண்மை என்ன என்பதை ஃபேக்ட் செக் குழு விளக்கம் அளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை குரங்கு கடித்ததாம். இந்த குரங்கு கடிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம் அந்த நபர்.

ஆனால் குரங்கு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென குரங்காக மாறிவிட்டார். இதற்கு ஆதாரம் இதோ என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் உலா வரும் அந்த வீடியோவில், குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டுள்ள நபர், கம்பி கதவுகளைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பிடிக்க வருகிறவர்களை குரங்கைப் போல கத்திக் கொண்டு உதைக்கிறார்; பிராண்டுகிறார். கீழே இறங்கி ஓடும் அவரை பிடிக்க முயன்றாலும் தாக்குகிறார். இதுதான் அந்த வீடியோ பதிவில் இடம் பெற்றிருந்தது.
பொதுவாக நாய் கடித்தவர்களுகுதான் நாய் போன்ற பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படும். திடீரென குரங்கு கடித்தவர் குரங்கு போல செயல்படுகிறார் என பரப்பிவிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் குழு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், குரங்கு கடித்து சிகிச்சைக்கு வந்தவர் திடீரென குரங்கு போல தவியதாக வீடியோ பகிரப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல். இக்காணொளியில் இடம் பெற்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிக்ச்சைக்காக அழைத்துவரப்பட்டவர். ஒத்துழைப்பு அளிக்காமல், முரண்டுபிடித்ததாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார் என்கிறது ஃபேக்ட் செக் டீம்.
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
சிவகங்கையில் குரங்கு கடிக்கு சிகிச்சைக்கு வந்தவர் குரங்கு போல மாறியதாக வீடியோ பகிரப்பட்டது.
முடிவு
குரங்கு போல நடித்தவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தவர்
ரேட்டிங்
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications