Fact check: “கூலி படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு”! புலம்பிய அமீர்கான்! உண்மை என்ன?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த கூலி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த், சௌபின் ஷகிர், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம்தான் கூலி. இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு காரணம் பாலிவுட் ஸ்டார் அமீர்கான்தான். அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்ததால், படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

படமும் வெளியாகி வசூலில் சில நூறு கோடிகளை குவித்ததாக சொல்லப்பட்டாலும், விமர்சன ரீதியாக திரைப்படம் பெரிய அளவுக்கு ஓடவில்லை. காரணம் திரைப்படம் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஹைப்தான். படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் வருந்தினார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, "ரஜினி சாருக்காகத்தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், என் கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. நான் உள்ளே வந்தேன், ஒன்று அல்லது இரண்டு வசனங்களைப் பேசினேன், பின்னர் மறைந்துவிட்டேன். அதற்கு எந்த நோக்கமும் இல்லை. எனது கதாபாத்திரம் மோசமாக எழுதப்பட்டிருந்தது.
#AamirKhan regrets doing the cameo in #Coolie pic.twitter.com/SMfDLd895k
— JD JAFFNA (@JD_Jaffna) September 12, 2025
படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாராக ஓடியதும், கடுமையான விமர்சனங்களும் இந்த விஷயத்தை மேலும் மோசமாக்கின. அந்தப் படத்தில் நான் படைப்பு சார்ந்த எந்த விஷயத்திலும் ஈடுபடவில்லை, எனவே இறுதித் தயாரிப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. இது ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது சரியாக அமையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அதன்பிறகு ஏற்பட்ட சமூக ஊடக கேலி என்னை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவ்வளவு பெரிய எதிர்வினை வரும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, மக்கள் ஏன் ஏமாற்றமடைந்தனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த காட்சி சரியாக அமையவில்லை, அவ்வளவுதான். அது ஒரு பெரிய தவறு, எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்களில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்" என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அமீர்கான் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல் தவறானது என்றும் சிலர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications