Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கதான் “டுவிஸ்டு”.. கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு! வீடியோ,படங்கள் உண்மையா? FACT CHECK

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், அதன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அது குறித்து உண்மை தகவலை சற்று அலசுவோம்.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கும் காசர்கோடுக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயிலான இது தொடங்கி வைக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே கேரள மாநில மக்கள் அதில் அதிகளவில் சென்று வருகிறார்கள். இதற்கிடையே கடந்த மே 1 ஆம் தேதி வந்தே பாரத் ரயிலை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

 Fact check about stone pelting images on Kerala Vande Bharat train

மலப்புரம் - திரூர் இடையே வந்தே பாரத் ரயில் சென்றுகொண்டு இருந்தபோது அதன் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்ததாக அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுன் செய்திகள் வெளியாகின. சில முன்னணி ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன. இந்த தாக்குதலில் வந்தே பாரத் ரயிலில் இருக்கும் சி4 பெட்டியின் கண்ணாடிகள் உடைந்துவிட்டதாகவும், பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும், வந்தே பாரத் ரயிலுக்கு சிறப்பு பாதுகாப்பை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டது. திரூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியின் உண்மை தன்மையை நாம் ஆராய முயன்றோம். அப்போது மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அம்மாநில ஊடகங்களும் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. தொடக்க பயணத்தின்போது நிறுத்தப்பட்ட ரயில் தற்போது நிறுத்தப்படாததால் ஆத்திரத்தில் யாரோ இவ்வாறு செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கல்வீச்சு தாக்குதலால் வந்தே பாரத் ரயில் கண்ணாடியில் லேசான விரிசல் ஏற்பட்டு இருக்கும் புகைப்படத்தை பயணி ஒருவர் பகிர்ந்து உள்ளார் என புகைப்படத்துடன் மலையாள ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் கேரளாவில் வந்தே பாரத் ரயில் கல்வீசி தாக்கப்பட்டது உண்மை என்று உறுதி செய்கிறோம். ஆனால், பிரச்சனை அத்துடன் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களில்தான்.

காரணம், அந்த புகைப்படங்கள் கேரளாவில் தாக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் எடுக்கப்பட்டது இல்லை. இது தொடர்பாக இணையத்தில் நாம் தேடுகையில் இதே புகைப்படத்தை கடந்த ஜனவரி மாதமே ஒரு ஆங்கில ஊடகம் பயன்படுத்தி உள்ளது. மே மாதம் தாக்கப்பட்ட ரயிலின் படம் எப்படி ஜனவரி மாதமே ஊடகத்தில் வெளியாகும்? என்ற கேள்வியோடு மேற்கொண்டு நாம் தேடியபோதுதான் முழு தகவலும் கிடைத்தர்து.

பிரபல செய்தி நிறுவனமான ANI கடந்த ஜனாவரி 11 ஆம் தேதி இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில், ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினம் அருகே கஞ்சராபலேம் பகுதிக்கு அருகே இந்த ரயில் கல்வீசி தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பகிரப்பட்ட தகவல் உண்மை என்றும், ஆனால், படமும், வீடியோவும் போலி என்பது தெரியவந்து உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு

முடிவு

கல்வீச்சு செய்தி உண்மை. அத்துடன் பகிரப்படும் படம் ஜனவரி மாதம் ஆந்திராவில் எடுக்கப்பட்டது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+