Fact Check சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்கும் ஆலையில் நுழைந்ததா சிறுத்தை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்கும் இடத்திற்குள் சிறுத்தை நுழைந்ததாக வந்த வீடியோ பொய்யானது. அதில் உண்மையில்லை.

சிறிய விஷயம் என்றாலும் கூட சமூகவலைதளங்களில் வைரலாகிவிடுகிறது. சிறிய தீப்பொறியும் இந்த வலைதளத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது. இதை பலர் உண்மை என நம்பும் அளவுக்கு இருக்கிறது.

அந்த வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ஒரு தொழிற்சாலை போன்ற இடம் இருக்கிறது. அங்கு நிறைய மிஷின்கள் இருக்கின்றன.

சிறுத்தை

சிறுத்தை

அந்த இடத்தில் ஒரு சிறுத்தை ஒன்று வருகிறது. சுற்றி சுற்றி பார்க்கிறது. பின்னர் ஒரு இடத்தில் திக்கான கவரால் மூடப்பட்ட திரை இருக்கும் இடத்தில் போய் கர்ஜிக்கிறது. இந்த வீடியோ வைரலானது. இது சபரிமலையில் உள்ள அரவணை பாயாசம் தயாரிக்கும் ஆலை என சொல்லப்படுகிறது. இப்படித்தான் சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது.

சபரிமலை சீசன்

சபரிமலை சீசன்

சபரிமலை சீசன் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சிறுத்தை நுழைந்தது என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்தியது. இப்படி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறதே தவிர ஊடகங்களில் கூட செய்தி வெளியாகவில்லை. மலையாள ஊடகங்களில் கூட செய்தி வெளியாகவில்லை. இதனால் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து அதற்கான குழு ஆய்வு செய்தது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

இந்த வீடியோவை புகைப்படங்களாக எடுத்து அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் போட்டு தேடப்பட்டது. இந்த வீடியோவை பலரும் கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது என பதிவிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் தெலுங்கு ஊடகங்களில் இந்த வீடியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

தெலுங்கானாவில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை

தெலுங்கானாவில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை

தெலுங்கானாவில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பார்மாசூட்டிக்கல் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்தது. இது குறித்து வனத்துறையினர் வந்து சிறுத்தையைப் பிடித்துச் சென்றனர் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

எனவே இந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது. சபரிமலை அரவணை பாயாசம் எடுக்கும் இடத்தில் எடுக்கப்பட்டது என்பது தவறான தகவல்.

Fact Check

வெளியான செய்தி

சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்கும் இடத்தில் நுழைந்த சிறுத்தை

முடிவு

இந்த வீடியோ தெலுங்கானாவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் சிறுத்தை நுழைந்த வீடியோதான் வைரலாக பரவி வருகிறது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+