கோவை-திருச்சூர் இடையே மலையை குடைந்து பாதையா! 2 மணிநேர பயணம் 10 நிமிடமாக குறையுதா? வீடியோ உண்மையா?
கோவை: தமிழ்நாட்டின் கோவை மற்றும் கேரளாவின் திருச்சூர் இடையே மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் பயண நேரம் 2 மணிநேரத்தில் இருந்து 10 நிமிடமாக குறையும் என வீடியோவுடன் தகவல் பரவி வரும் நிலையில் அந்த தகவல் உண்மையா? பொய்யா? என்பது பற்றி இங்கே பார்ப்போம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் தற்போது சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் உலகின் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனைவரும் உடனடியாக தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் சமூக வலைதளங்களில் போலியான தகவல்களும் பரப்பி விடப்படுகின்றன. இதனை போலி என விடாமல் உண்மை என நம்பி பலரும் பரப்பி வருகின்றனர். இதனால் தவறான தகவல்களை உண்மையென பலரும் நம்பும் சூழல் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. மவுலி என்பவர் நேற்று வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். வீடியோவில் மலையை குடைந்து உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்லும் காட்சிகள் உள்ளன.
அந்த வீடியோ பதிவில், அவர், ‛‛ கோயம்புத்தூரில் இருந்து திருச்சூர் சுரங்கபாதை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மணிநேர பயணம் என்பது 10 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மத்திய அரசுக்கு நன்றி. இதுபற்றி எந்த ஊடகங்களுக்கும் செய்தி வெளியிடவில்லை'' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவு சிறிது நேரத்தில் டிரெண்ட்டானது. அதாவது மவுலி நேற்று மாலை 6.35 மணிக்கு இந்த பதிவை செய்தார். இந்த பதிவுக்கு நிறைய லைக்ஸ்கள், ரீட்வீட்கள் செய்யப்பட்டன. இன்று மதியம் 3.30 மணியளவில் இந்த ட்வீட்டை மொத்தம் 546.7 ஆயிரம் பேர் பார்த்துள்ள நிலையில் 9,650 லைக்குகளும், 2,2825 ரீட்வீட்களும் செய்யப்பட்டு இருந்தன.
மேலும் இந்த பதிவை பார்த்த சிலர் இது போலியான தகவல் என கமெண்ட்டுகள் செய்தன. இதனால் இது விவாதத்தை கிளப்பி உள்ளது. இது உண்மையா? பொய்யா? வாங்க பார்ப்போம். அதாவது மவுலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ என்பது குதிரன் மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த குதிரன் மலை சுரங்கப்பாதை என்பது தமிழ்நாட்டின் சேலம் மற்றும் கேரளாவின் கொச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலை சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திரிச்சூர், கொச்சி உள்ளிட்ட நகரங்களை இணைக்கும். இதனை சிலர் கோவை-திருச்சூர் நெடுஞ்சாலை எனவும் அழைக்கின்றனர். முதலில் தமிழ்நாட்டில் இருந்து இந்த பாதை வழியாக கேரளா செல்ல வேண்டும் என்றால் ஆணைமலையின் மேற்குப்பகுதியாக உள்ள குதிரன் மலையை சுற்றி தான் செல்ல வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம், சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் அதிகம் பயணித்தன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனை தவிர்க்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் குதிரன் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டடது. 2016ல் இந்த பணி தொடங்கியது 2021ல் பணி முழுவதுமாக முடிவடைந்தது. இதையடுத்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்கரி முதற்கட்டமாக சுரங்கபாதையின் ஒருபகுதியை கடந்த 2021 டிசம்பரிலும், 2வது பகுதியை 2022ல் திறந்து வைத்தார். தற்போது இந்த குதிரன் மலையை குடைந்து உருவாக்கப்பட்ட சுரங்கபாதையின் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றனர். இது முற்றிலும் உண்மையான தகவல். இதன்மூலம் மவுலி பதிவிட்ட அந்த வீடியோ என்பது உண்மையானது.
ஆனால் அவர் குறிப்பிட்ட தகவலில் தவறு உள்ளது. அதாவது 2 மணிநேரம் சுற்றி செல்ல வேண்டிய பயணம் என்பது இந்த மலை சுரங்க பாதை அமைக்கப்பட்டதன் மூலம் 10 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருப்பது என்பது உண்மைக்கு புறம்பானது. ஏனென்றால் இந்த சுரங்கபாதை என்பது நேரடியாக கோவை-திருச்சூர் இடையே அமைக்கப்படவில்லை. மாறாக கோவை-திருச்சூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த பகுதியில் வாகனங்கள் 3 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி இருந்தது. அதோடு போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. தற்போது சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த 3 கிலோமீட்டர் தூரம் என்பது வெறும் 1.6 கிலோமீட்டர் என குறைந்துள்ளது. அதாவது கோவை-திருச்சூர் இடையே மொத்தம் 114 கிலோமீட்டர் தொலைவு நெடுஞ்சாலை உள்ளது. இதில் 1.6 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே இந்த குதிரன் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையை 60 கிலோமீட்டர் வேகத்தில் கடந்தால் ஒரு நிமிடத்துக்குள் சென்று விடலாம். இந்த சுரங்கப்பாதை இல்லாதபோது மக்கள் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு மட்டுமே இந்த குதிரன் மலை சுரங்கபாதை மூலம் குறைந்துள்ளது என்பது தான் உண்மை.

Fact Check
வெளியான செய்தி
கோவை-திருச்சூர் நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதையில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 மணிநேர பயணம் என்பது 10 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.
முடிவு
சேலத்தில் இருந்து கோவை, திருச்சூர் வழியாக கொச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ல் குதிரன் மலையை குடைந்து சுரங்கபாதை அமைக்கப்பட்டு இருப்பது உண்மை. ஆனால் பயண தொலைவு மட்டுமே ஒன்றரை கிலோமீட்டர் வரை
ரேட்டிங்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications