Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact check: இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கோகோ கோலாவை புறக்கணித்தாரா டேவிட் வார்னர்? உண்மை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, இஸ்ரேலலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோகோ கோலா பாட்டிலை மேசையிலிருந்து அகற்றி கீழே வைத்ததாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து உண்மை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜாகீர் கான் எனும் பேஸ்புக் பயனர் சமீபத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் செய்தியாளர் சந்திப்பின்போது தனக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டிலை எடுத்து கீழே வைத்திருக்கிறார். இந்த வீடியோவுடன், "டேவிட் வார்னர் இஸ்ரேலிய தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோகோ கோலாவை புறக்கணித்துள்ளார்" என்று ஜாகீர் கான் பதிவிட்டிருந்தார்.

David Warner Fact Check

இது சோஷியல் மீடியா முழுவதும் பரவலாக ஷேர் ஆனாது. பலரும் டேவிட் வார்னரின் கருத்த வரவேற்றனர். சிலர் விமர்சனம் தெரிவித்திருந்தனர். இந்நிலைியல் இந்த வீடியோ குறித்த உண்மை தன்மையை இந்தியா டிவி சரிபார்த்திருக்கிறது.

இதில், டேவிட் வார்னர் கோகோ கோலா பாட்டிலை எடுத்து தள்ளி வைத்தது உண்மைதான் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவம் கடந்த 2021ம் அண்டு நடந்தது. இதே ஆண்டில் சில நாட்களுக்கு முன்னர் பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவும் இதேபோல கோகோ கோலா பாட்டிலை புறக்கணித்திருந்தார். அப்போது இது விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் டிரெண்டாக உருவானது.

இதன் தொடர்ச்சியாகதான் டேவிட் வார்னரும் கோகோ கோலாவை புறக்கணித்திருந்தார். மற்றபடி இஸ்ரேல் போருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என இந்தியா டிவி தெரிவித்திருக்கிறது.

போர் பின்னணி: கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.

போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான பதிலை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். "ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றியிருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியும் என்று நினைப்பது தவறு" என்று கூறியுள்ளார்.

Fact Check

வெளியான செய்தி

போர் காரணமாக இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோகோ கோலா குளிர்பானத்தை செய்தியாளர் சந்திப்பில் டேவிட் வார்னர் புறக்கணித்தார்.

முடிவு

கோகோ கோலா பாட்டிலை டேவிட் வார்னர் புறக்கணித்தது 2021ம் ஆண்டில். இஸ்ரேலுக்கு எதிராக அவர் இதை செய்யவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+