Fact check: கர்நாடகாவில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவிற்கு சமீபத்தில் பிரதமர் மோடி சென்ற போது அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் மத்தியில் அதிகம் பரவியது. உண்மையில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்துக்கள் போராட்டம் நடைபெற்றதா? என்ற விவரத்தை பார்க்கலாம்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல்

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக சி வோட்டர் உள்ளிட்ட கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பது அக்கட்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது. எனினும், பாஜகவும் ஆட்சியை இழந்து விடக்கூடாது என பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறது. குறிப்பாக தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷா உள்பட அக்கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் அடிக்கடி கர்நாடகாவிற்கு விசிட் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டனர்.

2 மாதங்களில் 7 முறை

2 மாதங்களில் 7 முறை

குறிப்பாக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார். கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 முறை பிரதமர் மோடி கர்நாடகா சென்று வந்தது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. இதனிடையே, அண்மையில் கர்நாடக மாநிலம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இந்துக்கள் விழித்துக்கொண்டார்கள்

இந்துக்கள் விழித்துக்கொண்டார்கள்

காவி துண்டுகள் மற்று காவி கொடிகளை கைகளில் ஏந்தியபடி பலரும் போராட்டங்களில் ஈடுபடும் ஒரு படத்தை வெளியிட்டு, இதை பார்க்கும் போது கர்நாடகாவில் உள்ள இந்துக்கள் விழித்துக்கொண்டார்கள் என்றே தெரிகிறது என்ற கேப்ஷனுடன் பதிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

மோடிக்கு எதிராக போராடியதாக

மோடிக்கு எதிராக போராடியதாக

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக போராடியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரியவந்துள்ளது. இமேஜ் ரிவர்சிங் முறையில் இந்த படத்தை தேடி பார்த்த போது, கடந்த 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சிவசேனா கட்சி போராட்டம் நடத்திய படம் இது என்று தெரியவந்தது. பல முன்னணி ஊடகங்களும் இதே படத்துடன் அப்போது செய்தி வெளியிட்டு இருந்தன.

 சிவசேனா போராட்டம் நடத்திய போது

சிவசேனா போராட்டம் நடத்திய போது

எனவே, கர்நாடகாவில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் வெடித்ததாக வெளியான தகவலுடன் பரவிய புகைப்படம் தவறானது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனாவினர் போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்டது ஆகும்.

Fact Check

வெளியான செய்தி

கர்நாடக மாநிலம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக இந்துக்கள் போராட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

முடிவு

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா 2021 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக நடத்திய போராடத்தின் போது எடுக்கப்பட்டது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+