Fact Check: மின் கட்டணம் அப்டேட் ஆகல..இணைப்பு துண்டிப்பு..சமூக ஊடகங்களில் பரவும் கடிதம்..உண்மை என்ன?
டெல்லி: மத்திய மின் துறை அமைச்சகத்தின் பெயரில் நுகர்வோர்கள் பலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில், மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க உடனடியாக கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை தங்கள் பிரதிநிதியை தொடர்பு கொண்டு அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மின் துறை பெயரில் வெளியான இந்தக் கடிதம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய ஸ்மார்ட் உலகில் எந்த ஒரு தகவல்களும் நொடிப்பொழுதில் அனைவரையும் சென்றடைந்து வருகிறது. இதற்கு தற்போதைய சமூக வலைதளங்களே காரணம் என்று எளிதில் சொல்லிவிடலாம்.
தகவல் தொடர்பு வசதி அபரிமிதமாக பெருகிவிட்டதால் மக்களுக்கு தகவல்கள் விரைவாக சென்று சேர்ந்து விடுவதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் வதந்திகளும் அதற்கு சமமாக பரவிவிடுகிறது.

பொய்யான தகவல்கள்
குறிப்பாக அரசு நலத்திட்டங்கள் குறித்த பல பொய்யான தகவல்கள் பரவுகின்றன. மக்கள் மத்தியில் பரவும் இத்தகைய வதந்திகளால் தேவையற்ற குழப்பங்கள் உருவாவதோடு பீதியும் ஏற்படுவது ஒருபக்கம் என்றால் தகவல்கள் திருட்டு ஒருபக்கம் நடைபெறுகிறது. அரசின் நலத்திட்டங்கள் குறித்த வதந்திகள், வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவதை போன்று அனுப்புவது என பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

பரவி வரும் கடிதம்
வங்கிக் கணக்கு போன்றவற்றில் இருந்து பணத்தை திருடுவது என பலவகையான மோசடிகளும் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மத்திய மின் துறை அமைச்சகத்தின் அறிவிப்பு என்ற பெயரில் ஒரு லெட்டர் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவிவருகிறது. மின் நுகர்வோர்கள் சிலருக்கு நேரடியாக இந்த கடிதம் மெயில் போன்றவற்றில் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ரசீதை அப்டேட் செய்ய வேண்டும்
அதில், கடந்த மாதத்திற்கான மின்கட்டணத் தொகை அப்டேட் ஆகவில்லை என்றும் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இல்லையென்றால் இன்று நள்ளிரவிற்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

உண்மை என நம்பி..
அசல் கடிதத்தை போலவே சித்தரித்து அனுப்பப்பட்டு இருந்ததால் இந்தக் கடிதம் உண்மையானது என நம்பிய பலரும் இதை தங்களுக்கு பகிர்ந்ததாக தெரிகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்ததால் மக்கள் மத்தியில் சற்று பயம் ஏற்பட்டது. பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததோடு, கூகுளிலும் தேடத்தொடங்கினர்.

எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை
இந்த நிலையில், மத்திய அரசின் பிஐபி இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிஐபி ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய மின் துறை அமைச்சகம் பெயரில் வெளியாகி இருக்கும் இந்த கடிதம் போலியானது. மத்திய மின் துறை அமைச்சகத்தில் இருந்து இதுபோன்ற எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கடந்த மாதம் மின் கட்டணத்தை நீங்கள் செலுத்தியது அப்டேட் ஆகவில்லை. எனவே, நீங்கள் செலுத்தியதற்கான பில்லை எங்களிடம் அப்டேட் செய்ய வேண்டும் என மின் துறை அமைச்சகத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வரு
முடிவு
அந்தக் கடிதம் போலியானது. மின் துறை அமைச்சகத்தில் இருந்து அதுபோன்ற எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை.
ரேட்டிங்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications