கர்நாடகாவில் இலவச பஸ்சில் முந்தியடித்து ஏற முயன்றபோது.. பெண்ணின் கையே கட் ஆனதா? உண்மை என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில் கேஎஸ்ஆர்டிசி பஸ்சில் முந்தியடித்து ஏற முயன்ற பெண் ஒருவர் கையை இழந்ததாக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் அந்த வீடியோ உண்மையா? பொய்யா? என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாஜக 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
கர்நாடகாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. கர்நாடகா முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகின்றனர்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை கூறியது. அதாவது க்ருஹ லட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை. க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம். அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம்.
சக்தி திட்டத்தின் கீழ் கர்நாடகா அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற முக்கிய 5 அறிவிப்புகளை தெரிவித்து இருந்தது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி முதல் திட்டமாக அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத்தை கர்நாடகா அரசு செயல்படுத்தியது. அதன்படி பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி உள்ளிட்ட சாதாரண அரசு பஸ்களில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது கேஎஸ்ஆர்டிசி பஸ் ஒன்று சாலையில் நிற்கிறது. அதன் அருகே பெண் ஒருவர் கைகளை இழந்து அமர்ந்த நிலையில் வலி தாங்க முடியாமல் அழுகிறார். அவரை அங்கிருந்தவர்கள் அழைத்து செல்லும் வகையில் காட்சிகள் அமைந்து உள்ளன.
மேலும் இந்த சம்பவத்துக்கு கர்நாடகா அரசின் இலவச பஸ் பயண திட்டம் தான் காரணம் என்ற தகவல் பரவி வருகிறது. அதாவது கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் உல்லேனஹள்ளி கிராமத்தில் இலவச பயணம் செய்யும் நோக்கத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ்சில் ஏற பெண் ஒருவர் ஓடிவந்ததாகவும், அவர் பஸ்சின் ஜன்னலை பிடித்து முந்தியடித்து ஏற முயன்றபோது ஜன்னல் கண்ணாடியில் அவரது கை மாட்டி துண்டானதாகவும் தகவல்கள் பரவின.
இதையடுத்து பலரும் இலவச பயண திட்டத்தால் கர்நாடகாவில் பெண் ஒருவர் கையை இழந்துள்ளதாக கூறி இணையதளங்களில் பரப்பினர். சிலர் அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை என தெரிவித்தனர். இதுபற்றி விசாரித்து பார்த்தோம். அப்போது தான் கேஎஸ்ஆர்டிசி சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கேஎஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Disturbing visual from #free bus ride near Mandya #karnataka when woman tried to enter bus through window as it was overcrowded, her hand cut, y r ppl behaving such, can't they afford tickets when all have mobile, time it gets fixed when kids not able 2 access bus n 2 lost lives pic.twitter.com/R7aZti0GfZ
— Sneha 🇮🇳 (@sneharaghunath9) June 25, 2023
கடந்த 16ம் தேதி மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடுவில் இருந்து டி நரசிப்பரா நோக்கி கேஎஸ்ஆர்டிசி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் மைசூர் மாவட்டம் பசவராஜபுராவில் பகுதியில் சென்றபோது தமிழ்நாடு பதிவெண் கொண்ட டிரக் இந்த பஸ் மீது மோதியது. இந்த விபத்து என்பது டிரக் டிரைவரின் மோசமான டிரைவிங்கால் ஏற்பட்டது. அரசு பஸ் டிரைவர் மீது எந்த தவறும் இல்லை.
இருப்பினும் டிரக் மோதியபோது பஸ்சின் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த மைசூர் மாவட்டம் மாகுடிலு கிராமத்தை சேர்ந்த சாந்தா குமாரி (வயது 33) மறறம் மைசூர் மாவட்டம் உல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜம்மா (55) ஆகியோர் தங்களின் வலது கைகளில் படுகாயமடைந்தனர். இவர்களின் சிகிச்சை செலவை கேஎஸ்ஆர்டி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. மாறாக சமூக வலைதளங்களில் பரவுவது போல் ஓடும் பஸ்சில் ஏற முயன்று யாரும் கையை இழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கர்நாடகாவில் இலவச பஸ் பயண திட்டத்தையொட்டி கேஎஸ்ஆர்டிசி பஸ்சில் ஏற சென்ற பெண் கையை இழந்தார்.
முடிவு
கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ் மீது டிரக் மோதிய விபத்தில் பேருந்தின் ஜன்னல் அருகே இருந்த பெண் கையை இழந்தார்.
ரேட்டிங்
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications