400 சீட் வரவில்லை என்பதால் பாஜக தொண்டருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதா.. பரவும் வீடியோ- உண்மை என்ன
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 400 தொகுதிகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் 400 இடங்கள் one ind iafacecheck கிடைக்கவில்லை என்பதால் பாஜக தொண்டர் மீண்டும் மீண்டும் 400 தொகுதி.. 400 தொகுதி எனக்கூறி மனநலம் பாதிக்கப்பட்டதாக வீடியோ பரவி வரும் நிலையில் அது உண்மையா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பிரதமர் மோடி முதல் பாஜக தலைவர்கள் அனைவரும் லோக்சபா தேர்தலில் இந்த முறை பாஜக 370 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்து வந்தனர்.

அதோடு பாஜக கூட்டணியை 400 இடங்களில் வெல்ல வைக்க பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் இந்த பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. லோக்சபா தேர்தல் முடிவடைந்து கடந்த 4ம் தேதி ரிசல்ட் வெளியானது.
அப்போது பாஜகவுக்கு தனிமெஜாரிட்டிக்கான 272 சீட் கூட கிடைக்கவில்லை. மாறாக 240 இடங்களில் மட்டுமே பாஜக வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. பாஜகவின் 240 சீட்டுகளுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் 400 இலக்கு வைத்த பாஜக கூட்டணிக்கு 292 எம்பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளனர். இதனால் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைகிறது.
கடந்த 2014, 2019 ஆகிய லோக்சபா தேர்தல்களில் பாஜக கூட்டணி அமைத்து எதிர்கொண்டாலும் கூட பாஜக மட்டுமே 2014ல் 282 இடங்களிலும், 2019ல் 303 இடங்களிலும் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற்றது. இதனால் பிரதமர் மோடியால் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது. பாஜக கூட்டணி கட்சிகளின் தயவில் தான் மத்தியில் ஆட்சியை பிடிக்கிறது.
உண்மையில் இந்த ரிசல்ட்டால் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் ஒருவர் ‛‛இஸ் பார் சாசோ பார்'' என்று இந்தியில் திரும்ப திரும்ப கூறுவதும், அவருக்கு டாக்டர் சிகிச்சை அளிப்பது போன்றும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதனை பார்த்த பலரும் பாஜகவுக்கு 400 தொகுதிகள் கிடைக்காத விரக்தியில் தொண்டருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக கருத்து தெரிவித்து இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்தனர். தற்போதும் இந்த வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையே தான் இந்த வீடியோ உண்மையா, அதில் இருப்பவர் யார் என்று பரிசோதிக்கப்பட்டது.
அப்போது அந்த வீடியோவில் இருப்பவர் டாக்டர் ராஜிந்த் தாப்பா என்பதும், விளம்பரத்துக்காக அவர் திரைக்கதை எழுதி இப்படி நடித்திருந்ததும் தெரியவந்தது. மேலும் முதல் வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்த பாகத்தையும் அவர் உருவாக்கி உள்ளது தெரியவந்தது. இதன்மூலம் பாஜகவுக்கு 400 தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சியில் பாஜக தொண்டர் மீண்டும் மீண்டும் இஸ் பார் சாசோ பார் என கூறுவதாக பரவும் வீடியோ போலியானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

Fact Check
வெளியான செய்தி
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 400 இடங்களில் வெற்றி கிடைக்காததால் அந்த கட்சியின் தொண்டர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
முடிவு
இஸ் பார் சார்சோ பார் எனக்கூறும் நபரின் பெயர் ராஜிந்த் தாப்பா. இவர் விளம்பரத்துக்காக திரைக்கதை எழுதி நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரேட்டிங்
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications