For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழைய போட்டோவை போட்டு.. வசமாக சிக்கிய "பாஜக + அதிமுக" தலை.. "வெத்து விளம்பரம்".. கப்பென பிடித்த திமுக

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகம் இருக்கும் தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக பொய்யான செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வட இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்து வருகிறது.

ஆனால் முந்தைய பருவமழையை போல இல்லாமல் தமிழ்நாட்டில் இந்த முறை பருவமழையின் முதல் நாளில் இருந்தே மழை தீவிரமாக பெய்து வருகிறது.

சென்னை

சென்னை

இந்த முறை சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. பல இடங்களில் 120 மிமீக்கும் அதிகமாக தினமும் மழை பெய்தது. ஆனால் இவ்வளவு மழை பெய்தும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை. பிரதான சாலைகளில் எங்கும் சென்னையில் வெள்ளம் ஏற்படவே இல்லை. வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்ட காரணத்தால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் நீர் வேகமாக வடிந்தது.

வெள்ளம்

வெள்ளம்

சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் எல்லாம் வெள்ளம் தேங்கவில்லை. அதேபோல் மற்ற பெரும்பாலான பிரதான சாலைகளிலும் வெள்ளம் வேகமாக வடிந்தது. அதே சமயம் கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலையில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இங்கு இன்னும் முழுமையாக பணிகள் முடியாத காரணத்தால் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முடங்கின.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகம் இருக்கும் தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக பொய்யான செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி கொளத்தூர் எம்எல்ஏ அலுவலகம் இருக்கும் பகுதியில் வெள்ள நீர் வாயில் வரை தேங்கி உள்ளதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. பாஜக நிர்வாகி எஸ். ஆர் சேகர் இந்த பழைய புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

பழைய போட்டோ

பழைய போட்டோ

பழைய போட்டோவை பகிர்ந்து, நேற்றைய படம் இன்றைக்கு தண்ணீர் அதுவாக வடிந்திருக்கும் என நினைக்கிறேன் என்று போஸ்ட் செய்துள்ளார். அதேபோல் அதிமுக நிர்வாகி கோவை சத்யன் இதே பழைய போட்டோவை பகிர்ந்து உள்ளார். அவர் தனது போஸ்டில், மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை. மக்களை ஏமாற்றுவது என்றுதான் முடியுமோ. இதில் சென்னை 2.0 ஒரு வெத்து விளம்பரம் சுத்துது, என்று போஸ்ட் செய்துள்ளார்.

போஸ்ட்

போஸ்ட்

இரண்டு பேரின் போஸ்டும் வைரலாகி வருகிறது. இதற்கு தற்போது திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி இதை விமர்சனம் செய்துள்ளார். அதில், உங்கள் எடப்பாடி பழனிசாமியை இந்த இடத்திற்கு வந்து பார்வையிட சொல்லுங்கள் பார்ப்போம்... தெருவில் இறங்கி பார்த்தால் தானே உண்மை என்னவென்று தெரியும்!!! இந்த படம் கடந்த உங்கள் ஆட்சியின் லட்சணம்....🤦🏽‍♂️🤦🏽‍♂️mr... இந்தாங்க புது புகைப்படம்!!!, என்று புதிய படத்தை பகிர்ந்து உள்ளார்.

 பழைய போட்டோ

பழைய போட்டோ

இதில் கொளத்தூர் தொகுதி என்று பாஜக எஸ். ஆர் சேகர், அதிமுக கோவை சத்யன் பகிர்ந்துள்ள படங்கள் பழைய போட்டோக்கள் ஆகும். அந்த பகுதி புனரமைக்கப்பட்டுவிட்டது. அதேபோல் இந்த முறை அங்கும் வெள்ளமும் தேங்கவில்லை. ஆனால் பழைய போட்டோவை அரசியல் தலைவர்கள் உட்பட நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

Fact Check

வெளியான செய்தி

சென்னையில் முதல்வர் ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகம் இருக்கும் தொகுதியில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

முடிவு

கொளத்தூர் தொகுதி என்று பாஜக எஸ். ஆர் சேகர், அதிமுக கோவை சத்யன் பகிர்ந்து படங்கள் பழைய போட்டோக்கள் ஆகும். அந்த பகுதி புனரமைக்கப்பட்டுவிட்டது. அதேபோல் இந்த முறை அங்கும் வெள்ளமும் தேங்கவில்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Fact Check; Is CM Stalin Kolathur Constituency office under flood? What is the truth?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X