Fact Check: அனைவருக்கும் 239 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் செய்கிறதா மத்திய அரசு? உண்மை என்ன?
டெல்லி: கடந்த சில தினங்களாக மத்திய அரசின் ஃப்ரீ மொபைல் ரீசார்ஜ் ஸ்கீம் ('Free Mobile Recharge Scheme') என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளர்களின் செல்போன் எண்ணுக்கும் இலவசமாக ரூ.239 ( 28 நாட்கள் வேலிடிட்டி) ரீசார்ஜ் செய்யப்படும் என்று வாட்ஸ்ப் அப்பில் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த செய்தி வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது.
தற்போதைய நவீன உலகில் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் மின்னல் வேகத்தில் அனைவரையும் சென்றடைந்து வருகிறது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல் அடுத்த நொடியே போய் சேர்ந்து விடுகிறது.

தகவல் தொலைத்தொடர்பு
தொலைத்தொடபு வசதி பெருகியிருப்பதால் , மக்களுக்கு எந்த ஒரு தகவலையும் உடனே தெரிவிக்க முடியும்.. தொலை தூரத்தில் இருந்தாலும் சமூக ஊடகங்கள் மூலமாக மக்களின் கருத்து பரிமாற்றங்களும் எளிதாக உள்ளது. அதேபோல், தற்போது அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல் கூட பயனர்களுக்கு உடனடியாக கிடைத்து விடுகிறது. இதனால் பயனாளிகள் நலத்திட்ட உதவிகளை மிஸ் செய்யாமல் தவறாமல் பெற முடியும்.

வதந்திகள், மோசடிகள்
இப்படி ஏராளமான பயன்கள் இருந்தாலும் வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் வதந்திகளும் அதிக அளவில் பரவுவதை காண முடிகிறது. குறிப்பாக அரசின் நலத்திட்டங்கள் குறித்த வதந்திகள், வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவதை போன்று அனுப்புவது என பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. தவறான தகவல்களை பரப்பி அதன்மூலம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவது... வங்கிக் கணக்கு போன்றவற்றில் இருந்து பணத்தை திருடுவது என பலவகையான மோசடிகளும் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றன.

ரூ.239 ரீசார்ஜ் செய்யப்படுவதாக
அந்த வகையில், கடந்த சில தினங்களாக மத்திய அரசின் ஃப்ரீ மொபைல் ரிசார்ஜ் ஸ்கீம் ('Free Mobile Recharge Scheme') என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளர்களின் செல்போன் எண்ணுக்கும் இலவசமாக ரூ.239 ( 28 நாட்கள் வேலிடிட்டி) செய்யப்படும் என்றும் வாட்ஸ்ப் அப்பில் ஒரு செய்தி உலா வருகிறது. இந்த செய்தி வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது. இதனால், மக்கள் பலரும் இதை உண்மை என நம்பி தங்களுக்கு தெரிந்த குரூப்களிலும் பகிர்ந்ததாக சொல்லப்படுகிறது.

பிஐபி விளக்கம்
இன்னும் சிலரோ இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவது எப்படி எனவும் கூகுளில் தேடத்தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் பரவும் இத்தகைய தகவல் போலியானது என்று மத்திய அரசின் பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் கண்டு உண்மை தகவலை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது செல்போனுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.239க்கு ரீசார்ஜ் செய்யப்படும் என்று வாட்ஸ் அப்பில் பரவும் தகவலை போலியானது என தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசின் ஃப்ரீமொபைல் ரீசார்ஜ் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ரூ.239-க்கு ரீசார்ஜ் செய்யப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது.
முடிவு
இது முற்றிலும் போலியான தகவல். இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பும் மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
ரேட்டிங்
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications