
Fact check: தமிழகத்தில் இந்து மாணவிகளை முஸ்லீம்கள் தாக்குவதாக சோஷியல் மீடியாவில் பரப்பப்படும் விஷம்!
சென்னை: தமிழ்நாட்டில் கல்லூரி பெண்களை சில முஸ்லீம் இளைஞர்கள் ஈவ் டீஸிங் செய்ததாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறி சில வீடியோக்கள் வேகமாகப் பரவின. அதில் கல்லூரி மாணவிகளிடம் சிலர் அத்துமீறியதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து இருந்தனர். பெண்களிடம் அத்துமீறி ஈவ் டீஸிங் செய்யும் இவர்களுக்கு கடும் தண்டை அளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி இருந்தனர்.
லெஸ்பியன் உறவு! பெண் இன்ஜினியருடன் மாயமான தர்மபுரி கல்லூரி மாணவி.. கதிகலங்கிய காவல் நிலையம்

வீடியோ
அந்த வீடியோக்களில் கல்லூரி முன்பாக இளைஞர்கள் சிலர் வேகமாக பைக்கை ஓட்டுகின்றனர். மேலும், அவர்களைப் பெண்களிடம் வந்த கலாட்டா செய்வது போல இருக்கிறது. அவர்களைக் கண்டு அந்த பெண்கள் ஓடுகின்றனர். மேலும், சில இளைஞர்கள் அங்குள்ள ஒரு முதியவரைக் கொடூரமாகத் தாக்குவது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து உள்ளனர்.

வட இந்தியர்கள்
தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆண்கள் இந்து மாணவிகளிடம் ஈவ் டீஸிங் செய்வதாகச் சிலர் அதில் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக வட இந்தியாவில் வசிக்கும் பலரும் தான் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர். குறிப்பாக நெட்டிசன் ஒருவர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து, முஸ்லீம் இளைஞர்களால் பாதிக்கப்படும் பெண்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட பதிவிட்டு இருக்கிறது.

உண்மை என்ன
வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் கூட இந்த வீடியோவை பகிர்ந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முறையாக இல்லை என்றும் இந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவை ஆய்வு செய்து பார்க்கும் போது, இது முற்றிலும் பொய்யான ஒன்று என்பது தெரிய வருகிறது. இந்த வீடியோ தேவர் ஜெயந்தி சமயத்தில் எடுக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் அனைவருக்குமே தெரியும்.

உண்மை என்ன
வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் கூட இந்த வீடியோவை பகிர்ந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முறையாக இல்லை என்றும் இந்து பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால், இந்த வீடியோவை ஆய்வு செய்து பார்க்கும் போது, இது முற்றிலும் பொய்யான ஒன்று என்பது என்பது தெரிய வருகிறது. இந்த வீடியோ தேவர் ஜெயந்தி சமயத்தில் எடுக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் அனைவருக்குமே தெரியும்.

என்ன நடந்தது
ஒரே வீடியோவாக பகிரப்படும் இவை இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் ஆகும். இந்த இரண்டுமே தேவர் ஜெயந்தி சமயத்தில் எடுக்கப்பட்டது தான். முதல் சம்பவம் அக்டோபர் 30இல் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி இளைஞர்கள் சிலர் நுழைந்து கலாட்டா செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மதுரை போலீசார் ஏற்கனவே ஒன்பது பேரைக் கைது செய்துவிட்டனர். மேலும் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது
அடுத்து இரண்டாவது சம்பவமும் மதுரையில் நடந்தது தான். கடந்த நவ. 2ஆம் தேதி மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் கலாட்டா செய்த இளைஞர்களைத் தட்டி கேட்ட பெண்ணின் தந்தையைத் தாக்குகின்றனர். இந்த விவகாரத்திலும் மதுரை போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கவுன்சில் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மறுப்பு
இந்த இரு சம்பவத்திலுமே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து உள்ளனர். அதேபோல இந்த சம்பவங்கள் மத ரீதியான மோதல் இல்லை. கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்களும் இல்லை. இருப்பினும், இரு சம்பவங்களை ஒரே சம்பவம் போல இணைத்து, தமிழகத்தில் இந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வட இந்தியாவைச் சேர்ந்த சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாட்டில் முஸ்லீம் இளைஞர்கள் சிலர் இந்து பெண்களை ஈவ் டீஸிங் செய்வதாகத் தகவல் பரப்பும் வட இந்தியர்கள்.
முடிவு
சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களில் யாரும் இஸ்லாமியர்கள் இல்லை