Fact Check: நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக உலா வரும் மெசேஜ்..உண்மை என்ன?
நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று பிஐபி விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளதாகவும் இந்த திட்டத்தில் பயன்பெற செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்ட மெசேஜ் ஒன்று செல்போனுக்கு பலருக்கும் அனுப்பட்டது. இந்த தகவல் உண்மையில்லை என்று தற்போது மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது மக்கள் தகவல்களை பரிமாறிக்கொள்வது மிகவும் எளிதாகிவிட்டது.
உலகத்தின் எந்த மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு எளிதில் தகவல்களை சொல்லிவிட முடியும். அன்றாட செய்திகள், அரசு தொடர்பான நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பு தகவல்கள் என எந்த ஒரு தகவலும் அடுத்த சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வியாபித்து விடுகிறது.

வாட்ஸ்-அப் பில் குறுந்தகவல்
மக்களுக்கு எளிதில் தகவல் கிடைக்கும் நன்மைகள் இதில் இருந்தாலும் போலியான மற்றும் வதந்திகளும் அதிக வேகத்தில் வதந்திகள் பரவி விடுகின்றன. அதே போல சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் போலி தகவல்களை பரப்பும் கும்பலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு அதிவேகத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி விடுகின்றனர். பொய்ச்செய்திகள், வதந்திகள், அரசின் நலத்திட்டங்கள் பற்றிய தவறான தகவல்கள் என பல்வேறு தகவல்களையும் சிலர் திட்டமிட்டு பரப்புவது மக்களுக்கும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது.

இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக
எது உண்மை? எது பொய்? என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அச்சு அசல் உண்மை போலவே சித்தரித்து போலி செய்திகள் பரப்பி விடப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்பை இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு மெசேஜ் பலருக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த மெசேஜில், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மெசேஜ் வந்த பலருக்கும் குழப்பம்
எனவே உங்கள் எண்ணை அரசின் இலவச லேப்டாப் செயலியில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.அதோடு ஒரு லிங்க் ஒன்றும் கொடுக்கப்பட்டு இருந்தது. பல்வேறு இணைய மோசடிகளும் தற்போது இப்படி அடையாளம் தெரியாத லிங்குகளை கிளிக் செய்வதன் மூலமே நடைபெறுகிறது. இதனால், இந்த மெசேஜ் வந்தவர்கள் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், மத்திய அரசின் பிஐபி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

பிஐபி விளக்கம்
இந்திய அரசு இலவச லேப்டாப் கொடுப்பதாக பரவி வரும் மெசேஜ் போலியானது என்றும் இதுபோன்ற எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை எனவும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. இலவச லேப்டாப் என்ற மெசேஜ் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டும் என்ற அறிவுறுத்தும் வகையில் பிஐபி இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
நாடு முழுவதும் மாணவர்களுக்கு இந்திய அரசு இலவச லேப்டாப்பை வழங்குவதாகவும் இதற்காக செயலியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மெசேஜ் ஒன்று பரவியது.
முடிவு
நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.
ரேட்டிங்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications