Fact Check: கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் தவெக அனுமதி கேட்டதா? இன்பதுரை சொல்வது பொய்!
சென்னை: கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அனுமதி கேட்டு கொடுக்காத போலீஸ் தவெகவுக்கும் அதிமுகவுக்கும் குறுகலான வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கியது என மாநிலங்களவை அதிமுக எம்பி இன்பதுரை சொல்வது பொய் என Tamil nadu Fact Check ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் நேற்றைய தினம் தவெக விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சில குழந்தைகளை காணவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தவெக விஜய் தனது கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுவிட்டு அந்த இடத்தில் 27 ஆயிரம் பேர் கூடியதாக சொல்கிறார்கள். இன்னும் சிலரோ தமிழக காவல் துறை போதிய அளவில் இல்லை என்கிறார்கள். வேறு சிலரோ, விஜய் தாமதமாக வந்ததால்தான் அத்தனை கூட்டம் கூடியது என்றும் அவர் சொன்ன நேரத்திற்கு அந்த இடத்தில் அந்தளவுக்கு கூட்டம் இல்லை என்றும் விமர்சிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் ஜாமீனில் வர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்யையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
மேலும் சிலர் இந்த விஷயத்தை அரசியல் ரீதியாக அணுகுகிறார்கள். அதில் அதிமுக எம்பி இன்பதுரையோ, விஜய் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை கேட்டு அவருக்கு அனுமதி மறுத்துவிட்டு கடந்த ஆண்டு முதல்வருக்கும் உதயநிதிக்கும் மட்டும் அந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய கொடுத்ததாகவும் விமர்சித்திருந்தார். இவரது ட்வீட் வைரலான நிலையில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் சில உண்மைகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சரிபார்ப்பகம் (TN Fact Check) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் அனுமதி கேட்டதாக இன்பதுரை எம்.பி சொன்ன பொய் !
'கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது. ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?' என்று அதிமுக எம்.பி இன்பதுரை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டதாக காண்பிக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் இடம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா. தவெக தரப்பில் அனுமதி கேட்டது லைட் ஹவுஸ் ரவுண்டானா, பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை. இரண்டும் வெவ்வேறு பகுதி.
பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் !
படம் 1 : தவெக அனுமதி வேண்டிய கடிதத்தில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படம் 2 : பேருந்து நிலைய ரவுண்டானா மற்றும் லைட் ஹவுஸ் ரவுண்டானா வேறு வேறு என்பதை வரைபடம் மூலம் காணலாம்.

படம் 3 : முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொண்டது கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா.


Fact Check
வெளியான செய்தி
விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பிரச்சாரத்திற்கு தவெக அனுமதி கேட்ட போது காவல் துறை மறுத்ததாக அதிமுக எம்பி இன்பதுரை கருத்து
முடிவு
உண்மையில் அவர் சொன்னது பொய்யான செய்தி. தவெக கட்சி தலைமை கேட்ட இடம் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா. பேருந்து நிலைய ரவுண்டானா இல்லை.
ரேட்டிங்
-
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications