திருட்டு பயம்.. பர்தா, ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு தமிழக நகைக்கடைகளில் அனுமதியில்லை? உண்மை என்ன?
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நகைக் கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தொடர்ந்து புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அணிந்தவர்களுக்கு தமிழகத்தின் நகை கடைகளில் அனுமதி இல்லை என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அது பொய்யான தகவல் என்பதும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட தகவல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது போல வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் போலி செய்திகளும் பொதுமக்களிடையே பீதியை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமய, சாதி, சமூகம் சார்ந்த வதந்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் வகையில் போலி செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

அதாவது வட மாநிலங்களில் பர்தா, புர்கா, ஹிஜாப் அணிந்த பெண்கள் நகை கடைகளில் திருட்டு சம்பவங்களை ஈடுபடுவதைப் போலவும், நகை வியாபாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடிப்பது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வந்தது.
இதற்கிடையே தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்றின் பெயரை பயன்படுத்தி," பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்தா, ஹிஜாப் போன்றவற்றை அகற்றிவிட்டே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்" என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேக்ட் செக் செய்தபோது, இது போலியான செய்தி என்றும், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
" பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம். பல மாவட்டங்களில் நகை கடைகளில் நடக்கும் கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புர்கா, பர்த
முடிவு
உண்மையில் இது பொய்யான செய்தி ஆகும். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை தமிழக நகைக்கடை விற்பனையாளர்கள் அறிவித்தது போல சமூக வலைதளங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது.
ரேட்டிங்
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications