நித்யா மேனனை துன்புறுத்திய தமிழ் சினிமா நடிகர்.. தீயாக பரவிய தகவல்.. அவரே தந்த பரபர விளக்கம்
சென்னை: தமிழ் படத்தில் நடிக்கும் போது தமிழ் நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யா மேனன் கூறியதாக இணையத்தில் தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. அது என்ன சொன்னார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தென்னிந்தியப் படங்களில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.. இவர் தமிழ், மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு சித்தார்த்துடன் 180 என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு பல மொழிகளில் பல படங்கள் நடித்தார். ஓகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் எனப் பல ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பல மொழி படங்களில் இவர் படுபிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக இவர் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டி என்று கார்ட் ஒன்று டிரெண்டாகி வந்தது. அதில் அவர், "தெலுங்கு சினிமாவில் நான் இதுவரை எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொண்டது இல்லை. ஆனால், தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன். குறிப்பாக ஒரு படத்தில் நடிக்கும் போது ஷூட்டிங் சமயத்திலேயே ஒரு நடிகர் என்னைத் துன்புறுத்தினார்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த கார்டு இணையத்தில் படுவேகமாக பரவியது. பலரும் இந்த தகவலை உண்மை என்று நம்பத் தொடங்கினர். இருப்பினும், அந்த பேட்டி குறித்து எந்தவொரு வீடியோ அல்லது செய்தி இல்லாமல் வெறும் கார்டு மட்டுமே இணையத்தில் பரவியதால் பலருக்கும் இது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. பலரும் இந்த கார்ட் குறித்து சந்தேகம் எழுப்பி இருந்தனர். இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இது தொடர்பாகப் பிரபல பத்திரிக்கையாளர் மனோபாலா விஜயபாலன் இது போலியான தகவல் என்று கூறியுள்ளார். அதேபோல மூவி டிராக்கர் ஏபி ஜார்ஜ் இது குறித்து நடிகை நித்யா மேனனிடமே கேட்டுள்ளார். இதுபோல தகவல் பரவும் நிலையில் இது உண்மை தானா என அவர் கேட்டுள்ளார். அதை நித்யா மேனன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபோலத் தான் எங்கும் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நடிகை நித்யா மேனன் கூறியதாக இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்பது உறுதியாகிறது. நித்யா மேனன் சொல்லாத தகவலைக் கூறியதாக இணையத்தில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.
So it's fake...!! #NithyaMenen herself clarified that she never made any statements against her Tamil co-stars... pic.twitter.com/dqIJZjHrdv
— AB George (@AbGeorge_) September 26, 2023
நித்யா மேனன் இப்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவர் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத "D50" படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50ஆவது திரைப்படமான இதை அவரே இயக்குகிறார். கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சுந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
தமிழ் சினிமா நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக நித்யா மேனன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
முடிவு
இது பொய்யான தகவல்.. அவர் எங்கும் இதுபோல சொல்லவில்லை என்பதை அவரை தெளிவுபடுத்திவிட்டார்.
ரேட்டிங்
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications