Fact Check: தமிழகத்தில் இருந்து சாரை சாரையாக வெளியேறும் வடமாநிலத்தவர்? பரவும் போலி தகவல்! உண்மை என்ன
வடமாநிலத்தவர் தமிழகத்தை விட்டு வெளியேறுவதாகப் பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன எனப் பார்க்கலாம்.
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வரும் நிலையில், இதனால் வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரயில் நிலையங்கள் மூலம் வெளியேறி வருவதாகப் பொய்யான ஒரு தகவல் உலா வருகிறது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா சமயத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும் இப்போது திரும்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பலரும் கல்லூரி வரை படிப்பதால், ஹோட்டல் மற்றும் கட்டிட வேலைகளுக்கு யாரும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்த வேலைகளில் ஆள்பற்றாக்குறை ஏற்படுகிறது.

வடமாநிலத்தவர்
இதனால் தேவையை இயல்பாகவே வடமாநிலத்தில் இருந்து வருவோர் தான் பூர்த்தி செய்கிறார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால்.. இந்தியர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறார்கள். அதேபோலவே தங்கள் குடும்பத்தைக் காக்க வட மாநிலத்தவர் தென் மாநிலங்களுக்குக் குறிப்பாக அதிகம் வருகிறார்கள். தமிழ்நாட்டில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்பதாலும் வடமாநிலங்களுடன் ஒப்பிடும் போது ஊதியம் அதிகம் என்பதாலும் வடமாநிலத்தவர் இங்கு அதிகம் வருகிறார்கள்..

போலி செய்திகள்
வணிகர்களும் கூட இதுபோன்ற வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதாலேயே வடமாநிலத்தவரை பணியில் அமர்த்துவதாகக் கூறுகின்றனர். இருப்பினும், சில நேரங்களில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட போலீசார் விரைவாக உரிய நடவடிக்கை எடுத்துவிடுகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோல ஆங்காங்கே நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் போலீசார் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே சில நாட்களாக இணையத்தில் உண்மைக்குப் புறம்பான போலியான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது.

வீடியோக்கள்
தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பினர். வேறு மாநிலங்களில் நடந்தவை, பழைய சம்பவங்கள் இதில் பரப்பப்பட்டன. இவை பொய்யான வீடியோக்கள் என்றும் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் போலீசார் இந்தியிலும் வார்னிங் கொடுத்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநில இளைஞர்களுக்கு எனத் தனிப் பிரிவையும் உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும், இணையத்தில் இதுபோன்ற வீடியோக்கள் சில நாட்களாகவே வேகமாகப் பரவி வருகிறது.

பீகார் துணை முதல்வர் விளக்கம்
இவை தமிழ்நாட்டில் பெரியளவில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் வடமாநிலங்களில் இந்த வீடியோக்கள் தீயாகப் பரவியது. பீகார் மாநிலச் சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த விவகாரத்தை எழுப்பிய அங்குள்ள பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை முற்றிலுமாக மறுத்துள்ள துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இது பொய்யான தகவல் என்றும் போலியான வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை என்றும் விளக்கமளித்தார். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஏதாவது நடந்தாலும் பீகார் மற்றும் தமிழக அரசும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

வெளியேறும் வடமாநிலத்தவர்?
இதற்கிடையே பொய்யான வீடியோக்களை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறுவதாகவும் இதற்காக ரயில் நிலையங்களில் அவர்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் பரவின. வட இந்திய ஊடகங்களும். சில தமிழ் ஊடகங்களும் கூட இதுபோன்ற செய்தியை வெளியிட்டன. இதனால் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே ஒன் இந்தியா கள ஆய்வு செய்த போது இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது.

உண்மை என்ன
அதாவது ஹோலி பண்டிகை இப்போது நெருங்கி வருகிறது. வடமாநிலங்களில் ஹோலி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். வரும் மார்ச் 8ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஹோலியை குடும்பத்துடன் கொண்டாடவே சில வடமாநிலத்தவர் ஆர்வமாகக் கிளம்பி வருவது தெரிய வந்துள்ளது. இணையத்தில் பரவும் பொய் தகவலுக்காக இவர் சொந்த ஊர்களுக்குக் கிளம்பவில்லை. ஹோலி பண்டிகை காரணமாகவே கிளம்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால்.. இப்போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடமாநில இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவது அங்கிருந்து வரும் ரயில்களைப் பார்த்தாலே நமக்குப் புரியும்.

Fact Check
வெளியான செய்தி
வடமாநிலத்தவர் தாக்குதலால் தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் தொழிலாளர்கள்.
முடிவு
ஹோலி மற்றும் தனிப்பட்ட காரணங்களால் சிலர் மட்டுமே செல்கிறார்கள். தாக்குதலால் வெளியேறுவதாகப் பரவும் தகவல் பொய்
ரேட்டிங்
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications