FACT CHECK: அண்டார்டிகாவில் ஜெய்ஸ்ரீராம் கொடி.. ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடினரா தமிழர்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்டார்டிகாவுக்கு சென்ற 3 தமிழர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட கொடியுடன் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ராமர் பிராண பிரதிஷ்டையை கொண்டாடியதாக செய்திகள் வெளியாகி உள்ளன நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து அலசுவோம்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் தொடர்ந்து அது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் அண்டார்டிகாவில் ராமர் கோயில் திறப்பு விழாவை தமிழர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட கொடியுடன் கொண்டாடியதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின. இதன் உண்மைத் தன்மையை அறிய அந்த புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடினோம். அப்போது வெங்கட ராஜு என்பவர் இதை வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Fact check on 3 Tamilians celebrated the Ram Prana Pratishtai in Antartica


நண்பர்களுடன் அண்டார்டிகா கண்டத்தின் கொடியை வைத்து நிற்கும் காட்சியும் அதில் உள்ளது. ஆனால், அவர் வைத்திருக்கும் கொடியில் ஜெய் ஸ்ரீராம் என்றோ அண்டார்டிகா என்றோ எழுதப்படவில்லை. உலகின் 7 வது கண்டத்தில் கால் வைத்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியான வாசத்தை மட்டுமே தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டு அவர் வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் அந்த வீடியோ ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஜெய்ஸ்ரீராம் என எழுதி வதந்தி பரப்பி இருப்பது உறுதியாகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1528 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர் பாகியால் கட்டப்பட்ட பாபர் மசூதி வரலாற்று சிறப்பு மிக்க புனித தளமாக இருந்து வந்தது. 1700 களில் இருந்து இந்த இடத்தை ராமர் பிறந்த இடம் என்று கூறி இந்துத்துவாவினர் உரிமை கோரி வந்தனர். மசூதிக்குள் சிலை வைக்கப்பட்டு மத ரீதியான மோதல்கள் நடைபெற்று வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கரசேவகர்கள் அயோத்தியில் ஒன்று கூடி பாபர் மசூதியை இடித்தனர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பலர் இதில் குற்றம்சாட்டப்பட்டனர். இதன் காரணமாக நாடு முழுவதும் வன்முறை களமானது. பல இடங்களில் மதக் கலவரங்கள் வெடித்தன. இது தொடர்பாக சட்டப்போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, பாபர் மசூதி இருந்த முழு நிலத்திலும் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. அத்துடன் மசூதி கட்டுவதற்கான மாற்று இடத்தையும் வழங்க உத்தரவிட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயிலை திறந்து வைத்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழாவை நடத்தினார். இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Fact Check

வெளியான செய்தி

அண்டார்டிகாவில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட கொடியுடன் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடிய தமிழர்கள்

முடிவு

வீடியோவில் கொடியில் ஜெய்ஸ்ரீராம் என்று எழுதப்படவில்லை. பரவியது போட்டோசாப் படம்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+