Fact Check: சீதாராம் யெச்சூரி கிறிஸ்தவரா? அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சொல்வது உண்மையா?
சென்னை: மறைந்த முதுபெரும் இந்திய இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி ஒரு கிறிஸ்தவர் என அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரியின் பேழையில் வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள இந்த கருத்து உண்மையா? என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் சீதாராம் யெச்சூரி 1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கிருந்து அவரது அரசியல் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அவசர நிலை பிரகடன காலத்தில் தலைமறைவு வாழ்க்கை, கைது, சிறைவாசம் என எதிர்கொண்டார்.

டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக 3 முறை பொறுப்பு வகித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் நீடித்தார். 1990களில் மத்தியில் கூட்டணி அரசுகள் அமைந்த போது இடதுசாரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. அந்த தருணங்களில் இடதுசாரிகளின் முகமாக செயல்பட்டவர் சீதாராம் யெச்சூரி. உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அண்மையில் காலமான சீதாராம் யெச்சூரியின் உடல் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக வழங்கப்பட்டது.
சீதாராம் யெச்சூரியின் உடல் பேழையில் வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி, அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி, அவர் ஒரு கிறிஸ்துவர் என விமர்சித்து பதிவிட்டுள்ளது. சீதாரம் யெச்சூரி உண்மையில் கிறிஸ்தவரா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின்
— Theekkathir (@Theekkathir) September 12, 2024
சிறந்த நாடாளுமன்ற உரை!#Theekkathir | #sitaramyechuri | #cpim pic.twitter.com/m1X4ulEaFX
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் சீதாராம் தாம் யார் என்பது குறித்து ஆற்றிய உரை அவரது மறைவுக்குப் பின்னர் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த உரையில், மெட்ராஸ் அரசு மருத்துவமனையில் நான் பிறந்தேன். தற்போது சென்னை என அழைக்கப்படுகிறது. தெலுங்கு மொழி பேசுகிற பிராமணர் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தாத்தா நீதிபதி.மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆந்திரா பெஞ்ச், குண்டூருக்கு மாற்றப்பட்டது. ஆகையால் நாங்கள் 1954-ம் ஆண்டு இடம் பெயர்ந்தோம். 1952-ம் ஆண்டு பிறந்த நான், 1956-ம் ஆண்டு ஹைதராபாத்தில் குடியேறினோம். என்னுடைய பள்ளி கல்வியை நாடு விடுதலைக்கு முன்னர் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த இஸ்லாமிக் கலாசார நிறுவனத்தில்தான் பயின்றேன். அதன் பின்னர் டெல்லிக்கு வந்தேன். இஸ்லாமிய சூபியின் மகளை- சிஸ்தி சூபி என அழைக்கப்படுகிறவரின் மகளை மணந்தேன். என் மனைவியின் தாயார் மைசூர் ராஜ்புத்திரர். 8-வது நூற்றாண்டில் மைசூருக்கு இடம் பெயர்ந்தவர்கள். நாம் 21-வது நூற்றாண்டில் இருக்கிறோம். தென்னிந்தியாவின் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த நான் இந்த பெண்ணை திருமணம் செய்தேன். அப்படியானால் என் மகன் எப்படி அறியப்படுவார்? ஒரு பிராமணர் என்றா? ஒரு முஸ்லிம் என்றா? அல்லது இந்து என்றா? யார் அவர்? என் மகன் ஒரு இந்தியன் என்பதைவிட வேறு எதுவும் பெருமிதமானது இல்லை என பேசியிருந்தார்.

Fact Check
வெளியான செய்தி
மறைந்த இடதுசாரித் தலைவர் சீதாராம் யெச்சூரி கிறிஸ்தவர் என இந்து மக்கள் கட்சி எக்ஸ் பக்கத்தில் பதிவு
முடிவு
சென்னையில் பிறந்த ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர்
ரேட்டிங்
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications