மீண்டும் பரப்பிவிடப்பட்ட 'தோனிக்காக ரூ. 7 சிறப்பு நாணயம் வெளியிடும் மத்திய அரசு'- உண்மை என்ன?
டெல்லி: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனியை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு ரூ7 சிறப்பு நாணயம் வெளியிடப் போவதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் தோனிக்காக ரூ7 சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என தகவல்கள் பகிரப்படுகிறது; இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சிறப்பு செய்வதற்காக ரூ7 சிறப்பு நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப் போவதாக சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. தோனியின் படத்துடன் இந்த நாணயம் வெளியிடப்படுகிறது என சில படங்களும் பகிரப்பட்டன. இதனை தோனி ரசிகர்களும் கொண்டாடி இருந்தனர். ஆனால் அப்போது மத்திய அரசு இது போலி செய்தி என மறுத்திருந்தது.

தற்போது மீண்டும் அதேபோல ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், மீண்டும் இது போலியான செய்தி என உறுதிப்படுத்தி உள்ளது. பொருளாதார விவகாரங்கள் துறை இத்தகைய அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம்.


Fact Check
வெளியான செய்தி
தோனியை சிறப்பிக்க ரிசர்வ் வங்கி ரூ7 சிறப்பு நாணயம் வெளியிடுகிறது என சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டது.
முடிவு
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இதனை மறுத்துள்ளது
ரேட்டிங்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications